சிவகார்த்திகேயனின் 'மதராசி' படத்தில் நடித்தேன், ஆனால் - பிக் பாஸ் சாச்சனா சொன்ன விஷயம்

By subhashini · 9/9/2025

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் மதராசி. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தான் இயக்கி இருக்கிறார்.

இந்த படத்தில் ருக்மணி வசந்த், வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ஷபீர் கல்லரக்கல், விக்ராந்த் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் மதராசி படத்தில் சாச்சனா நடித்திருந்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த மகாராஜா என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் சாச்சனா.

சாச்சனா குறித்த தகவல்:

இந்த படத்தின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நிறைய வரவேற்பு கிடைத்தது. இதனை அடுத்து இவர் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலத்தினால் இவருக்கு மீண்டும் பட வாய்ப்புகள் கிடைத்தது. அதோடு தற்போது இவர் வெப் சீரியஸ்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில் சாச்சனா, நான் ரெண்டு படங்களில் கமிட்டாக இருக்கிறேன்.

சாச்சனா சொன்னது:

அந்த படத்தின் அறிவிப்பு வந்த உடனே சொல்கிறேன். இப்போது நான் சிவகார்த்திகேயன் சார் நடித்த மதராசி படத்தில் நடித்திருக்கிறேன் என்று சொல்லியிருந்தார். ஆனால், உண்மையில் படத்தில் அவருடைய காட்சிகள் வரவில்லை டெலிட் செய்து இருக்கிறார்கள். தற்போது சாச்சனா மதராசி படத்தில் நடித்த சில புகைப்படங்கள் தான் வெளியாகியிருக்கிறது. இதை பார்த்த நெட்டிசன்கள், ஐயோ பாவம் இப்படி செஞ்சுட்டாங்களே என்றெல்லாம் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

View this post on Instagram

A post shared by @neeyaru.dacomali

மதராஸி படத்தின் கதை:

படத்தில் தமிழகத்தில் யாருக்கும் தெரியாமல் வட இந்தியாவில் இருந்து துப்பாக்கி கலாச்சாரத்தை நடத்துகிறார்கள். அந்த வகையில் ஆறு கண்டெய்னர்களில் துப்பாக்கிகளை வித்யுத் ஜம்வால், ஷபீர் கல்லரக்கல் எடுத்துக்கொண்டு வருகிறார்கள். அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று போலீசரும் முயற்சிக்கிறார்கள். இருந்தாலும் அவர்களை மீறி துப்பாக்கிகளை சென்னைக்கு கொண்டு வந்து விடுகிறார்கள். இதற்கிடையில் சிவகார்த்திகேயன் காதல் தோல்வியால் தற்கொலைக்கும் முயற்சி செய்கிறார். பின் அவரை வைத்து தான் இந்த துப்பாக்கிகளை அழிக்க போலீஸ் அதிகாரி முடிவெடுக்கிறார். சிவகார்த்திகேயன் வில்லன்களை கண்டுபிடித்துமே அவர்களை கொலை செய்ய தயங்குகிறார். அதற்குப் பிறகு என்ன ஆனது? பதுக்கி வைத்த துப்பாக்கிகளை சிவகார்த்திகேயன் அழித்தாரா? இல்லையா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.

behindtalkies AMP · Quick view
View full