ஜெஃப்ரி குறித்து வார்னிங், ரவீந்தருக்கு நோஸ் கட், உள்ளே சென்று ஆட்டத்தை துவங்கிய சாச்சனா
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் சாச்சனா செய்த அட்ராசிட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி இன்று ஆறாவது நாள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.
இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின் 24 மணி நேர எவிக்ஷனில் அதிக நாமினேஷன்களை சாச்சனா பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். அதை அடுத்து முதல் வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க்கில் தர்ஷிகா வெற்றி பெற்று தலைவராகி இருக்கிறார்.
பிக் பாஸ் 8:
பின் முதல் வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் ஜாக்லின், ரவீந்தர், சௌந்தர்யா, முத்து, ரஞ்சித்,அ ருண் ஆகியோர் இடம் பிடித்து இருக்கிறார்கள். பின் ஆண்கள் vs பெண்கள் டாஸ்க் கொடுக்கப்பட்டது. முதல் நாளில் இருந்து நிகழ்ச்சியில் கலவரம் சண்டை தொடங்கி விட்டது. நேற்று யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் சாச்சனா பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். எல்லோருமே சாச்சனாவை பார்த்தவுடன் கட்டி அரவணைத்து வரவேற்றார்கள்.
சாச்சனா என்ட்ரி:
பின் சாச்சனா எல்லோரையும் ஒரு இடத்தில் உட்கார வைத்து, வெளியில் நடந்ததைப் பற்றி பேசி இருக்கிறார். அப்போது குறைவான கன்டென்ட் கொடுப்பது ரஞ்சித், சத்யா, விஷால் என்று சொன்னார். நீங்கள் மூன்று பேருமே நிறைய கன்டென்ட் கொடுக்க வேண்டும். நன்றாக விளையாடுங்கள் என்று நிறைய அறிவுரை சொல்லியிருந்தார். அதற்குப்பின் பெண்கள் அணியை தனியாக அழைத்து நீங்கள் ஆண்களை நம்பாதீர்கள். நீங்கள் உங்களுக்குள் ஒற்றுமையாக இருங்கள்.
ஆட்டம் சூடு பிடித்தது:
அவர்கள் எவ்வளவு பிரச்சனை வந்தாலும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். நீங்கள் உங்களுக்குள்ளே சண்டை போடுவதால் தான் உங்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. உங்களுக்குள் நடக்கும் விஷயத்தை வெளியில் சொல்லாதீர்கள். அது வேற மாதிரி மாறுகிறது. அவர்கள் நன்றாக உங்களை வைத்து கேம் விளையாடுகிறார்கள். அதற்குப் பின் சாச்சனா ஆண்கள் அணியிடம் பேசி இருந்தார். உடனே ரவீந்தர், நீ எங்களிடம் கேம் விளையாடுகிறாயா? என்று கேட்கிறார். அதற்கு சாச்சனா, அப்படியெல்லாம் இல்லை.
ரசிகர்கள் கருத்து:
நான் நடந்ததை சொன்னேன். உங்கள் விருப்பம் என்று சொல்கிறார். பின் ஜெப்ரி, ஜாக்லின் இருவருக்கும் அறிவுரை சொல்கிறார். ஜெப்ரி செய்த வேலையை சொல்லி நோஸ் கட் செய்தார் சாச்சானா. இப்படி சாச்சனாவின் என்ட்ரியால் பெண்கள் அணியில் நிறைய மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இனி தான் பிக் பாஸ் 8 சீசன் உடைய ஆட்டமே ஆரம்பம் என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். பிக் பாஸ் வீட்டுக்குள் ரீ என்ட்ரி கொடுத்த உடனேயே சாச்சனா வேற லெவலில் போட்டியாளர்களை செஞ்சி இருக்கிறார். கண்டிப்பாக இவர் இறுதி வரை செல்வார் என்றும் கூறுகிறார்கள்.