20 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட விஜய்யின் சச்சின் படம் - முதல் நாள் வசூல் எவ்வளோ தெரியுமா?

By subhashini · 19/4/2025

விஜய்யின் சச்சின் படத்தின் முதல் வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் விஜய் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம் சச்சின்.
இந்த படத்தில் ஜெனிலியா, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தார்கள்.

இந்த படத்தை ஜான் மகேந்திரன் என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தானு தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், இந்த படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இதனால் இதை கொண்டாடும் விதமாக இந்த படத்தை உலகெங்கும் பிரம்மாண்டமாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு ரீ-ரீலீஸ் செய்திருக்கிறார்.

சச்சின் படம்:

விஜய் ரசிகர்கள் சச்சின் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் பற்றி தான் தற்போது இணையத்தில்வைரலாகி வருகிறது. அதாவது, இந்த படம் ஃப்ரீ புக்கிங்கில் மட்டுமே சுமார் 12 லட்சம் வசூல் செய்தது. தமிழகத்தில் மட்டும் சச்சின் படம் சுமார் 6 கோடி வசூல் செய்து இருக்கிறது. இந்த தொகையை இரவு காட்சியுடன் சேர்த்தால் 10 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது.

முதல் நாள் வசூல்:

இது மட்டும் இல்லாமல் இன்று மற்றும் நாளை விடுமுறை நாட்கள் என்பதால் புக்கிங் ஃபுல்லாக இருப்பதால் வசூல் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதேபோல் கடந்த ஆண்டு விஜயினுடைய கில்லி படத்தையும் ரீ ரிலீஸ் செய்திருந்தார்கள். எதிர்பார்த்ததை விட இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது. அதேபோல் சச்சின் படமும் வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய்.

விஜய் திரையப்பயணம்:

கடைசியாக விஜயின் நடிப்பில் வெளியாகியிருந்த ‘கோட்’ படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இது தான் இவரின் கடைசி படம். இது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தாலும் விஜய் அரசியலுக்கு வருவது சந்தோசத்தை கொடுத்து இருக்கிறது. இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியின் பெயரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் அறிவித்திருந்தார்.

விஜய் அரசியல்:

அதை தொடர்ந்து விஜய் அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். பின் இவர் தன் கட்சியின் கொடி, பாடல், உறுதிமொழி, கொள்கை எல்லாம் அறிவித்து இருந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் விஜய் தன்னுடைய முதல் மாநாட்டை பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் நடத்தி இருந்தார். இதை பார்த்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டி இருந்தார்கள். அதோடு வருகிற 2026 ஆம் ஆண்டில் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் விஜய் அறிவித்து இருந்தார். இதை தொடர்ந்து இவர் தன் கட்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full