'3BHK' படத்தை பார்த்து கிரிக்கெட் வீரர் சச்சின் சொன்ன வார்த்தை - நெகிந்த இயக்குநர் ஸ்ரீ கணேஷ்

By subhashini · 26/8/2025

சரத்குமாரின் 3BHK படத்தை பாராட்டி சச்சின் சொல்லி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக இருப்பவர் சரத்குமார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளிவந்த படம் 3BHK.

இந்த படத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா, சைத்ரா ஜே. அச்சர் உட்பட பல சைத்ரா நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு அம்ரித் இசையமைத்து இருந்தார். தினேஷ் பி கிருஷ்ணா, ஜிதின் ஆகியோர் ஒளிப்பதிவு செய்து இருந்தார்கள். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பாக அருண் விஷ்வா இந்த படத்தை தயாரித்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு பெற்று இருக்கிறது.

3BHK படம்:

வீடு வாங்க வேண்டும் என்று கனவோடு ஓடும் ஒரு நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையை தான் இயக்குனர் அழகாக காண்பித்து இருப்பார். இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள். அதோடு இந்த படம் ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் இந்த படம் தொடர்பாக கிரிக்கெட் வீரர் சச்சின் சொல்லி இருக்கும் விஷயம் தான் வைரலாகி வருகிறது. அதாவது, கிரிக்கெட் வீரர் சச்சின், சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார்.

சச்சினுக்கு பிடித்த படம்:

அப்போது ரசிகர், உங்களுக்கு பிடித்த உணவு, நீங்கள் சமீபத்தில் பார்த்து பிடித்த போன படம் எது? என்று கேட்டிருக்கிறார். அதற்கு சச்சின், எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் படங்களை பார்ப்பேன். அப்படி சமீபத்தில் நான் பார்த்த படங்களில் எனக்கு ரொம்ப பிடித்தது 3BHK என்று கூறியிருந்தார். இப்படி இவர் கூறியிருந்ததை 3BHK படத்தினுடைய இயக்குனர் ஸ்ரீ கணேஷ் குறிப்பிட்டு பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், ரொம்பவே நன்றி சச்சின் சார்.

இயக்குனர் சொன்னது:

நீங்கள் தான் என்னுடைய குழந்தை பருவத்தின் ஹீரோ. இந்த வார்த்தை எங்களுக்கு ரொம்ப பெரியது என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த பதிவுதான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. படத்தில் நாயகன் சரத்குமார். சரத்குமாரின் மனைவி தேவையானி. இவர்களின் பிள்ளைகள் தான் சித்தார்த், மீதா. இவர்களை வாசுதேவன் அண்ட் ஃபேமிலி என்று சொல்வார்கள். இவர்களுடைய கனவே சொந்த வீடு வாங்குவது தான். அதற்காக குடும்பமாக சேர்ந்து ரொம்பவே கடுமையாக உழைக்கிறார்கள். சித்தார்த்திற்க்கு சுத்தமாகவே படிப்பு ஏறவில்லை.

படத்தின் கதை:

தன்னுடைய பிள்ளைகளை எப்படியாவது படித்து பெரிய ஆளாக்க வேண்டும் என்றும் சொந்தமாக வீட்டை வாங்க வேண்டும் என்று சரத்குமார் அயராமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். பின் சொந்த வீடு வாங்குவதற்காக பணத்தை சரத்குமார் சேர்த்து வைக்கிறார். அப்போது சரத்குமார் பல போராட்டங்களை சந்திக்கிறார். கடைசியில் சரத்குமார் சொந்தமாக வீடு வாங்கினாரா? கடைசியில் சித்தார்த்துக்கு வேலை கிடைத்ததா? தன்னுடைய மகளின் கல்யாணத்தை நல்லபடியாக சரத்குமார் நடத்தி வைத்தாரா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full