கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றழைக்கப்படும் சச்சினின் இளம் வயது பயிற்சியாளரும் வழிகாட்டியுமான பத்மபுரஷ அச்ரேக்கர் நேற்று (ஜனவரி 2) உடல்நல குறைவு காரணமாக மும்பையில் காலமானார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக விளங்கியவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டின் கடவுள் என்று புகழப்பட்ட சச்சின் டெண்டுல்கரின் ஆஸ்தான பயிற்சியாளராக இருந்து வந்தவர் தான் 86-வயதான அச்ரேக்கர் நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்து சமீபத்தில் காலமானார்.

Advertisement

சச்சின் டெண்டுல்கர் தவிர, அஜித் அகார்கர், சந்திரகாந்த் பண்டிட், வினோத் காம்ப்ளி, பிரவீன் அம்ரே ஆகிய கிரிக்கெட் வீரர்களுக்கும் அச்ரேக்கர் பயிற்சியாளராக இருந்துள்ளார். 1932 ஆம் ஆண்டுபிறந்த அச்ரேக்கர் 1943-ஆம் ஆண்டு நியூ ஹிந்தி ஸ்போர்ட்ஸ் கிளப்பில் விளையாடத் துவங்கினார். 1963-64 கால கட்டத்தில் ஒரே ஒரு முதல்தர கிரிக்கெட் போட்டியில் மட்டும் அச்ரேக்கர் விளையாடியுள்ளார். 

இந்நிலையில் அச்ரேக்கர் மறைவிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் சச்சின். அதுமட்டுமல்லாமல்
அச்ரேக்கரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட சச்சின் அவரது உடலை தோளில் சுமந்து சென்றார். தற்போது அந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

Advertisement

Advertisement
Advertisement