என் மகன் ஒரு நாளைக்கு 19 மணி நேரம் வேலை பண்ணுறான், ஆனால்- நெகிழ்ச்சியில் சாய் அபயங்கர் பெற்றோர்

By subhashini · 15/10/2025

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர் மற்றும் இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் ‘கோமாளி’ படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா மூலம் அறிமுகம் ஆகி இருந்தார். கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் இயக்கி நடித்த ‘லவ் டுடே’, ‘டிராகன்’ படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் டியூட். இந்த படத்தை கீர்த்தீஸ்வரன் என்பவர் தான் இயக்கியிருக்கிறார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் மமிதா பைஜி, சரத்குமார், ரோகினி, டிராவிட் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதோடு இந்த படம் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தினுடைய வெளியிட்டு உரிமையை தமிழகம் முழுவதும் ஏஜிஎஸ் நிறுவனமே பெற்று இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று இருக்கிறது.

டியூட் படம்:

இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றிருந்தது. இதில் சாய் அபயங்கரின் பெற்றோரும், பிரபல பாடகர்களுமான திப்பு- ஹரிணி இருவருமே கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது திப்பு, சாய் அபயங்கருக்கு நீங்கள் கொடுத்த அன்பிற்கு நன்றி. அதனை வார்த்தைகளால் சொல்ல முடியாது. 2024 ஜனவரி 22 வரைக்கும் சாய் இப்படி ஒரு இடத்திற்கு வருவான் என்று எங்களுக்கு தெரியாது. அன்றைக்கு தான் தீம் மியூசிக் ஓட கட்சி சேரா பாடல் வெளிவந்தது.

திப்பு-ஹரிணி பேட்டி:

இன்றைக்கு அவன் இப்படி ஒரு இடத்திற்கு வருவதற்கு காரணம் ரசிகர்களுடைய அன்பும் பிரார்த்தனையும் தான். அவர்களுக்கு ரொம்ப நன்றி என்று கூறி இருக்கிறார். இவரைத் தொடர்ந்து ஹரிணி, என் பையனுக்கு கிடைத்த வரவேற்பு எனக்கு கிடைத்த மாதிரி இருக்கிறது. அவனுடைய கடின உழைப்பிற்காகவே மேலும் மேலும் வெற்றி கிடைக்க வேண்டும். ஒரு நாளைக்கு அவன் 19 மணிநேரம் வேலை செய்கிறான். எங்களுக்கே அது ஆச்சரியமாக தான் இருக்கு. சாய்க்கு சப்போர்ட் செய்யும் ரசிகர்கள் அனைவருக்குமே ரொம்ப நன்றி என்று நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்கள்.

சாய் அபயங்கர் குறித்த தகவல்:

சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்கள் கட்சி சேர, ஆசை கூட. இந்த பாடல்களின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் சாய் அபயங்கர். 'ஜென் சி’ என்ற மோடில் அமைந்த இந்த பாடல்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது. 2k தலைமுறையினரின் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. தற்போது ரசிகர்கள் மத்தியில் பேவரட் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பிரபல பின்னணி பாடகர்கள் திப்பு மற்றும் ஹரணியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full