கருப்பு படத்தில் நான் பாட ஏ ஆர் ரஹ்மான் சார் இதை தான் சொன்னார் - சாய் அபயங்கர் எக்ஸ்குளுசிவ்
சுயாதீனப் பாடல்கள் மூலம் தன்னுடைய மியூசிக் கேரியரைத் தொடங்கி இன்று பிரபல இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டு இருப்பவர் சாய் அபயங்கர். இவர் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் கட்சி சேர, ஆசை கூட போன்ற பாடல்களின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். ‘ஜென் சி’ என்ற மோடில் அமைந்த இந்த பாடல்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது. அதன் மூலம் இவருக்கு சினிமாவில் வாய்ப்பும் கிடைத்து இருக்கிறது.
தற்போது ரசிகர்கள் மத்தியில் பேவரட் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகி இருந்த டிராகன் படத்தில் இசையமைத்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. அதனை அடுத்து சாய் அபயங்கர் தற்போது சூர்யாவின் கருப்பு படத்தில் இசை அமைக்கிறார். ஆர் ஜே பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் சூர்யா நடிக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.
கருப்பு படம்:
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இங்கித படத்தில் இருவரும் இணைந்து இருக்கிறார்கள். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. இந்த படம் மே 14ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க கருப்பு படத்திற்கு முதன் முதலில் ஏ ஆர் ரகுமான் தான் இசையமைப்பதாக இருந்தது. அவர் விலகிய பிறகுதான் சாய் அபயங்கர் இந்த படத்திற்கு ஒப்பந்தமானார். ஆனால், இதற்கான காரணம் என்றவென்று தெரியவில்லை.
சாய் அபயங்கர் பேட்டி:
இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் சாய் அபயங்கர், முதலில் இந்த படத்தில் ஏ ஆர் ரகுமான் சார் தான் ஒப்பந்தமாகி இருந்தார் என்பது எனக்கு தெரியாது. திடீரென்று என்னுடைய வழிகாட்டியாக இருக்கும் சந்தோஷ், சூர்யா சார் படத்திற்கு இசையமைக்க போகிறேன் என்றார். அவர் சொன்னதுமே எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அதற்கு பிறகு தான் ஆரம்ப போஸ்டர்களில் ரகுமான் சாரோட பெயர் இருந்ததை பார்த்தேன். என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. ஆனால், தயாரிப்பாளர்கள் சூர்யா என்னை விரும்புவதை தெரிந்து கொண்டேன். அதை சிறப்பாக செய்வது என் கடமை. நான் ரகுமான் சாரிடம் இதைப் பற்றி பேசினேன். அவருக்கு இதில் எந்த ஒரு பிரச்சனையும் தயக்கமும் இல்லை என்று சொன்னார்.
ரகுமான் பற்றி சொன்னது:
அவர் மற்றவர்களை ஊக்குவிப்பதில் எப்போதுமே தயங்கவில்லை. 100 பிரச்சனைகள் இருந்தாலும் அவர் ரொம்பவே அமைதியாக இருப்பார். அது எனக்கு பெரிய ஊக்கத்தை தருகிறது. அதேபோல் சிலம்பரசன் நடித்த 10 தல படத்தில் நான் பணியாற்றிய போது ரகுமான் சார் திடீரென்று அறைக்குள் வந்து நான் உருவாக்கிய இசையை கேட்டார். அதைக் கேட்டுவிட்டு இது சூப்பராக இருக்கிறது என்று பாராட்டினார். அந்த பாராட்டிலிருந்து வெளிவர எனக்கு ஆறு மாதங்கள் ஆனது. அந்த ஜாம்பவானுடன் பணியாற்றுவேன் என்பதை நான் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை. ரகுமான் சார் கொடுத்த ஊக்கத்தையும் அந்த நாட்களையும் என்னால் ஒருபோதுமே மறக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.