7வது படிக்கும் போதே ரகுமான் சாருக்கு கம்போஸ் பண்ணி அனுப்புவேன், ஆனால் - சாய் அபயங்கர் ஆதங்கம்

By subhashini · 16/3/2026

சுயாதீனப் பாடல்கள் மூலம் தன்னுடைய மியூசிக் கேரியரைத் தொடங்கி இன்று பிரபல இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டு இருப்பவர் சாய் அபயங்கர். இவர் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் கட்சி சேர, ஆசை கூட போன்ற பாடல்களின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். ‘ஜென் சி’ என்ற மோடில் அமைந்த இந்த பாடல்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது.

2k தலைமுறையினரின் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதன் மூலம் இவருக்கு சினிமாவில் வாய்ப்பும் கிடைத்து இருக்கிறது. தற்போது ரசிகர்கள் மத்தியில் பேவரட் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பிரபல பின்னணி பாடகர்கள் திப்பு மற்றும் ஹரணியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகி இருந்த டிராகன் படத்தில் இசையமைத்திருந்தார்.

சாய் அபயங்கர் குறித்த தகவல்:

இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. அதோடு இந்த படத்தில் இவருடைய பாடல்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து சாய் அபயங்கர் தற்போது சூர்யாவின் கருப்பு, அட்லி-அல்லு அர்ஜுன் காம்போவில் உருவாகும் படம், தனுஷினுடைய 55 ஆவது படம் என
பல படங்களில் பிசியாக பணியாற்றி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க இவர் சுயாதீன பாடல்களும் இசை அமைத்து வருகிறார்.

சாய் அபயங்கர் பேட்டி:

அந்த வகையில் சாய் அபயங்கர் இசையில் வந்த பாடல் பவழ மல்லி. இவருடன் இந்த பாடலில் ஸ்ருதிகாசனும் இணைந்து பாடியிருக்கிறார். இந்த பாடலுக்கு சாய் அபயங்கர்- கயாடு இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். இந்த பாடல் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இந்நிலையில் இந்த பாடல் தொடர்பாக அளித்த பேட்டியில் சாய் அபயங்கர், நான் என்னுடைய பாடல் வரும் நேரத்தில் தான் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பேன்.

சினிமா பற்றி சொன்னது:

நான் அந்த பாடலை எப்படி விளம்பரப்படுத்தலாம், எந்த மாதிரியான வழிகளில் அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கலாம் என்றாலும் யோசிப்பேன். அதை தாண்டி ரீல்ஸ் கண்டன்டிற்காக எல்லாம் ஒரு பாடல் செய்ய வேண்டும் என்று நினைத்ததே கிடையாது. நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது தொடர்ந்து நான் கம்போஸ் செய்த பாடல்களை ரகுமான் சாருக்கு மெயில் அனுப்பி கொண்டிருந்தேன். ஆனால் அவர் அதை பார்த்து இருப்பாரா என்று கூட தெரியவில்லை. எட்டாம் வகுப்பு முடித்த பிறகு என்னுடைய பேஷன் மியூசிக் தான் என்பதை புரிந்து கொண்டேன். அதோடு பணத்தை என் படிப்பிற்காக செலவழிக்க வேண்டாம் என்று என்னுடைய பெற்றோர்களிடமும் சொல்லிவிட்டேன் என்று கூறியிருக்கிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full