'ராமாயணம்' படத்தில் நடிக்க நான் இதை செய்தேனோ? - ஊடகங்களுக்கு சாய் பல்லவி எச்சரிக்கை

By krithika · 12/12/2024

தன்னைப் பற்றி வதந்திகளை பரப்புவோருக்கு சாய்பல்லவி கொடுத்திருக்கும் பதிலடிதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சாய் பல்லவி. இவர் கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்டவர். இவர் 2008 ஆம் ஆண்டு கொண்டவர். டிவியில் ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ என்ற நடன நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருந்தார்.

அந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. பின், கடந்த 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த ‘பிரேமம்’ பாலி திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் சாய் பல்லவி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார். இப்போது கூட இவரை அதிகம் மலர் டீச்சர் என்றுதான் ரசிகர்கள் கூப்பிடுகிறார்கள். தற்போது இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பலமொழி படங்களில் நடித்து வருகிறார்.

அமரன் படம்:

கடைசியாக சாய் பல்லவி, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ படத்தில் நடித்திருந்தார். கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் தனது இன்னுயிரை நீத்த சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு படம்.

சாய் பல்லவிக்கு கிடைத்த பாராட்டு :

இந்தப் படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி, இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்திருந்தார். தீபாவளியை முன்னிட்டு வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சாய் பல்லவியின் நடிப்பை அனைவரும் பாராட்டி இருந்தார்கள். தற்போது சாய்பல்லவி, ஹிந்தியில் ' ராமாயணம்' திரைப்படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படத்தில் சாய் பல்லவியுடன் இணைந்து ரன்வீர் கபூர் ராமர் வேடத்தில் நடிக்கிறார்.

பரவிய வதந்திகள்:

இந்நிலையில் சமீபத்தில், ராமாயணம் படத்தில் சாய் பல்லவி நடிப்பதற்காக முழுக்க முழுக்க சைவமாக மாறிவிட்டார் என்று வதந்திகள் கிளம்பியது. அதாவது, ராமாயணம் படத்தில் நடித்து வருவதால் அசைவம் சாப்பிடாமல் இருக்கும் சாய் பல்லவி, சூட்டிங் செல்லும் போது, தன்னுடன் ஒரு சமையல்காரரையும் அழைத்துச் செல்கிறார். அவர் செய்து கொடுக்கும் உணவுகளையே சாப்பிடுவதாக வதந்திகள் பரவின. ஆனால், சாய் பல்லவி ஏற்கனவே தான் ஒரு வெஜிடேரியன் என்று பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

சாய் பல்லவியின் கோபம்:

தற்போது வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சாய் பல்லவி , ' என்னைப் பற்றி வெளியாகும் பொய்யான தகவல்களுக்கு நான் பலமுறை அமைதியாக தான் இருந்துள்ளேன். இது போன்ற செய்திகளை என்ன உள்நோக்கத்தில் வெளியிடுகிறார்கள் என்பது எனக்கு தெரியாது. கடவுளுக்கு தான் தெரியும். இது போன்ற வதந்திகள் வெளியாவது தொடர்கதையாக உள்ளது. ஆனால், இனி என்னால் அமைதியாக இருக்க முடியாது. நான் பதிலளிக்கும் நேரம் இது. என் படங்களில் ரிலீஸ் அறிவிப்புகள் வரும்போது, என் கேரியரில் முக்கிய நேரங்களிலும் இதுபோன்ற வதந்திகள் அதிகம் பரவுகிறது. இது போன்ற பொய்யான செய்திகள் இனிமேல் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று ஒரு சில முன்னணி பத்திரிக்கைகளை குறிப்பிட்டு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full