பாலிவுட் சென்றதும் இப்படியா? ட்ரிங்க்ஸ் பார்ட்டியில் செம ஆட்டம் போட்டுள்ள சாய்பல்லவி. இதோ வீடியோ.

By Ajju · 10/3/2024

ட்ரிங்க்ஸ் பார்ட்டியில் நடிகை சாய்பல்லவி குத்தாட்டம் போட்டு இருக்கும் வீடியோ, புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை சாய் பல்லவி. இவர் கோயம்பத்தூரை பூர்விகமாக கொண்டவர். இவர் 2008 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபு தேவா’ என்ற நடன நிகழ்ச்சியில் பங்குபெற்று இருந்தார்.

https://twitter.com/SaiPallavi92s/status/1766111186603642956

அந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. பின் 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளி வந்த “பிரேமம்” என்ற திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் சாய்பல்லவி ஒட்டு தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார். இப்போது கூட இவரை அதிகம் மலர் டீச்சர் என்று தான் ரசிகர்கள் கூப்பிடுகிறார்கள். அதன் பின்னர் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

சாய்பல்லவி திரைப்பயணம்:

அதிலும் சாய்பல்லவி தெலுங்கில் ராணாவுடன் இணைந்து ‘விரத பர்வம்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை அடுத்து கடைசியாக சாய்பல்லவி நடிப்பில் வெளியாகி இருந்த படம் கார்கி. இந்த படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கி இருந்தார். சாய் பல்லவி உடன் காளி வெங்கட், ஆர்.எஸ். சிவாஜி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்த இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

https://twitter.com/SaipallaviFC/status/1765995405790380057

தற்போது இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அமரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்த படத்தை கமலஹாசன் தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். ஏறக்குறைய தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்பு 80 சதவீதம் முடிவடைந்து இருக்கிறது. கடைசி கட்ட வேளையில் படத்தினுடைய வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றது.

அமரன் படம்:

மேலும், இந்த படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற பல மொழிகளில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தினுடைய டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இது மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தான் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இதனை அடுத்து தெலுங்கில் ஒரு படத்திலும் சாய்பல்லவி நடித்திருக்கிறார். தற்போது சாய்பல்லவி அவர்கள் பாலிவுட்டிலும் அறிமுகமாக இருக்கிறார்.

https://twitter.com/PoojaSuniramana/status/1766381800836997612

குத்தாட்டம் போட்ட சாய்பல்லவி:

இவர் ஹாலிவுட் நடிகர் அமீர்கானின் மகன் ஜுனைத் கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படத்தை அமீர்கானே தயாரிக்கிறார். கடந்த மாதமே படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. முதல் கட்டமாக ஜப்பானில் இந்த படத்தினுடைய படப்பிடிப்பை பட குழு நடத்தி முடித்து இருக்கிறார்கள். இந்நிலையில் இதை கொண்டாடும் விதமாக ட்ரிங்க்ஸ் பார்ட்டியை படக்குழுவினர் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதில் நடிகை சாய் பல்லவியின் கலந்து கொண்டிருக்கிறார். மேலும், இவர் குடிக்கவில்லை என்றாலும் செம டான்ஸ் ஆடி இருக்கிறார். தற்போது அந்த புகைப்படங்கள் தான் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full