விஜய் தேவாரகொண்டாவுடன் எந்த படத்திலும் நடிக்க போவதில்லை – சாய் பல்லவி சொன்ன காரணம்.

By Ajju · 20/8/2022

எப்போதுமே நான் விஜய் தேவர்கொண்டா உடன் நடிக்க மாட்டேன் என்று சாய்பல்லவி அளித்திருந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தென்னிந்திய சினிமா உலகில் தற்போது இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை சாய் பல்லவி. இவர் கோயம்பத்தூரை பூர்விகமாக கொண்டவர். இவர் 2008 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபு தேவா’ என்ற நடன நிகழ்ச்சியில் பங்குபெற்று இருந்தார். அந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது.

பின் 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளி வந்த “பிரேமம்” என்ற திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் சாய் பல்லவி ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார். இப்போது கூட இவரை அதிகம் மலர் டீச்சர் என்று தான் ரசிகர்கள் கூப்பிடுகிறார்கள். பின்னர் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் சாய்பல்லவி தெலுங்கில் ராணாவுடன் இணைந்து ‘விரத பர்வம்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

விரத பர்வம் படம்:

இந்த படம் சமீபத்தில் தான் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் சாய் பல்லவி பெண் நக்சலைட் ஆக நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து இருந்தார்கள். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாவிட்டாலும் சாய்பல்லவியின் துணிச்சலான நடிப்புக்கு பலரும் பாராட்டு தெரிவித்திருந்தார்கள். இதனை அடுத்து தற்போது சாய்பல்லவி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கார்கி.

கார்கி படம்:

இந்த படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சாய் பல்லவி உடன் காளி வெங்கட், ஆர்.எஸ். சிவாஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை ரவிச்சந்திரன், ராமச்சந்திரன், ஐஸ்வர்யா, லட்சுமி உள்ளிட்ட நான்கு பேர் இணைந்து தயாரிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சாய்பல்லவி நடிக்க முடியாது சொன்ன நடிகர்:

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் சாய் பல்லவி அவர்கள் ஒரு நடிகருடன் மட்டும் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். அவர் வேற யாரும் இல்லைங்க, விஜய் தேவர்கொண்டா தான். அவருடன் எந்த ஒரு படத்திலும் நடிக்க மாட்டேன். குடும்ப பாங்கான கதைகளில் மட்டுமே கவனம் செலுத்த இருக்கிறேன். அது மட்டுமில்லாமல் பெண்களுக்கு முக்கியத்துவம் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன் என்று கூறியிருந்தார். இப்படி இவர் விஜய் தேவர்கொண்டா உடன் நடிக்க மாட்டேன் என்று கூறிய தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சாய்பல்லவி நடிக்காததற்கு காரணம்:

இதற்கு காரணம் என்னவென்றால், விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளிவந்த படம் டியர் காம்ரேட். இந்த படத்தில் விஜய் தேவர்கொண்டாவுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். ஆனால், முதலில் சாய்பல்லவி தான் நடிப்பதாக இருந்தது. அந்த படத்தில் அதிகளவில் முத்தக் காட்சிகள் இருந்ததாலும், கவர்ச்சி காட்சிகளும் அதிகமாக இருந்ததாலும் சாய் பல்லவி நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டார். அதோடு வேறு எந்த படத்திலும் விஜய் தேவர்கொண்டா உடன் நடிப்பதில்லை என்று அவர் கூறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full