லென்ஸ், ஹேர் ஸ்டைல், மேக்கப் போட்டு நடிக்கணும் அவசியம் இல்லை - நடிகை சாய் பல்லவி ஓபன் டாக்

By subhashini · 17/12/2025

தென்னிந்திய சினிமா உலகில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சாய் பல்லவி. இவர் 2008 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ என்ற நடன நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருந்தார். அந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. பின் கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த ‘பிரேமம்’ பாலி மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் சாய் பல்லவி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார்.

தற்போது இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பழமொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை அடுத்து கடந்த 2024 ஆம் ஆண்டு சாய் பல்லவி, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி, இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சாய் பல்லவியை அனைவரும் பாராட்டியிருந்தார்கள்.

சாய் பல்லவி குறித்த தகவல்:

பின் சாய்பல்லவி தெலுங்கில் ‘தண்டேல்’ என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது சாய்பல்லவி அவர்கள் பாலிவுட்டில் உருவாகி வரும் ராமாயணம் என்ற படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கே ஜி எஃப் புகழ் நடிகர் யாஷ், ரன்வீர் கபூர் உட்பட பலர் நடிக்கிறார்கள். இதை தவிர தமிழில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாக இருக்கும் காதல் படத்தில் நடிக்கிறார். இதை தொடர்ந்து கமலஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சாய் பல்லவி பேட்டி:

இப்படி அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகியிருக்கும் சாய் பல்லவியின் வீடியோ ஒன்றுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், பிரேமம் படத்திற்கு பிறகு நான் நடித்த ஒரு படத்தினுடைய போட்டோ சூட் நடந்தது. அப்போது எனக்கு லென்ஸ் மற்றும் மேக்கப் போடப்பட்டது. ஆனால், அந்த படத்தின் இயக்குனர் உங்களுக்கு மேக்கப், லென்ஸ் வேண்டாம். நீங்கள் இருப்பது போலவே போதும் என்று இயல்பாக படபிடிப்பு நடத்தினார். என் பார்வையில், ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் போது வித்தியாசமான ஹேர் ஸ்டைல், மேக்கப் செய்து வித்தியாசமாக காட்டுவதை விட அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு இருந்தால் போதும்.

மேக்கப் பற்றி சொன்னது:

ஒவ்வொரு படத்திலும் கதாபாத்திரம் செதுக்கப்படும் விதம் வித்தியாசமாக இருக்கும். அதனால் நாமும் மக்களுக்கு வித்தியாசமாக தெரிவிப்போம். ஒவ்வொரு படத்திலும் கலைஞர்கள் வெவ்வேறு கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் இயல்பாகவே வித்தியாசமாக இருக்கும். ஆனால், ஒரே மாதிரியே கதாபாத்திரத்திற்கு வெவ்வேறு விதமான ஹேர் ஸ்டைல் மேக்கப் செய்தால் அதனால் எந்த பயனும் இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து. இது என்னுடைய நிலைப்பாடு என்பதை விட நான் பணியாற்றிய அனைத்து படங்களின் இயக்குனர்களின் நிலைப்பாடு இதுவே என்று சொல்லலாம். அதனால எனக்கு எப்போதும் மேக்கப் தொல்லை பெரிதாக இருந்ததில்லை என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full