கதை கூட கேட்காமல் விஜய் படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகை ? புகைப்படம் உள்ளே

By Ajju · 27/2/2018
பிரேமம் படத்தில் மலர் டீச்சர் கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் சாய்பல்லவி. அந்த படம் மாபெரும் ஹிட் அடித்ததையொட்டி பல தெலுங்கு,மலையாளம் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனாலும் தமிழ் படம் எதிலும் அதிகாரப்பூர்வமாக கமிட் ஆகவில்லை. தமிழில் விஜய் நடிக்கவிருக்கும் கரு படத்தில் கதாநாயகியாக நடிக்க சாய்பல்லவியிடம் கேட்கப்பட்டது. பேய் படம் என்று சொன்னவுடனே கதை கூட கேட்காமல் "நோ" என்று சொல்லிவிட்டார். காரணம் என்னவென்று கேட்டதற்கு "என் அம்மாவிற்கு பேய்படம் பிடிக்காது" அதானால் நான் நடிக்கமாட்டேன் என்றுவிட்டாராம். பின்னர் விஜய் தரப்பிடம் இருந்து முதலில் கதையை கேளுங்கள் பின்னர் முடிவுசெய்யுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பின்னர் கதையை கேட்ட சாய்பல்லவி நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full