காதலுக்கு கிடைத்த கிரீன் சிக்னல், சாய் பல்லவி வீட்டில் சிம்பிளாக முடிந்த நிட்சயதார்த்தம். இதோ புகைப்படங்கள்.

By Arun · 23/1/2024

நடிகை சாய் பல்லவியின் வீட்டில் நடந்து இருக்கும் நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை சாய் பல்லவி. இவர் கோயம்பத்தூரை பூர்விகமாக கொண்டவர். இவர் 2008 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபு தேவா’ என்ற நடன நிகழ்ச்சியில் பங்குபெற்று இருந்தார். அந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது.

பின் 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளி வந்த “பிரேமம்” என்ற திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் சாய்பல்லவி ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார். இப்போது கூட இவரை அதிகம் மலர் டீச்சர் என்று தான் ரசிகர்கள் கூப்பிடுகிறார்கள். பின்னர் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு சாய்பல்லவி தெலுங்கில் ராணாவுடன் இணைந்து ‘விரத பர்வம்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

சாய்பல்லவி திரைப்பயணம்:

இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், தென்னிந்திய சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவராக சாய்பல்லவி திகழ்ந்து கொண்டு இருக்கிறார். சாய்பல்லவியின் துணிச்சலான நடிப்புக்கு பலரும் பாராட்டு தெரிவித்திருந்தார்கள். இதனை அடுத்து சமீபத்தில் சாய்பல்லவி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கார்கி. இந்த படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சாய் பல்லவி உடன் காளி வெங்கட், ஆர்.எஸ். சிவாஜி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் எஸ் கே 21 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான வேலைகள் சென்று கொண்டு இருக்கிறது. இதனை அடுத்து தெலுங்கில் ஒரு படத்திலும் சாய்பல்லவி நடித்திருக்கிறார். கூடிய விரைவில் இந்த இரண்டு படங்களுமே வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் நடிகை சாய் பல்லவியின் தங்கையின் காதலன் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாய் பல்லவி தங்கை :

நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன். இவர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான சித்திரை செவ்வானம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியிருந்தார். அதற்குப் பின் இவர் ஒரு சில படங்களில் நடித்தார். மேலும், இவர் சாய்பல்லவி போல் சினிமாவில் கொடி கட்டி பறப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சினிமாவில் இருந்து இவர் விலகிக்கொண்டார். இருந்தாலும் பூஜா கண்ணன் தொடர்ந்து சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார்.

பூஜா - வினீத் நிச்சயதார்த்தம் :

இந்த நிலையில் இவர் தன்னுடைய காதலன் புகைப்படத்தை கடந்த சில தினங்களுக்கு முன்னர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். இவரது காதலுக்கு இரு வீட்டாரும் கிரீன் சிக்னல் கொடுக்கவே தற்போது பூஜாவிற்கும் வினீத்திற்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. அக்காவான சாய் பல்லவியை இன்னும் திருமணம் செய்துகொள்ளாத நிலையில், தங்கை திருமணத்திற்கு தயாராகிவிட்டார் என்றும் சர்ச்சைக்குரிய விஷயங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், ரசிகர்கள் பலரும், பூஜாவிற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full