விருது வாங்கிய ஜி.வி. பிரகாஷ், உற்சாகத்தில் தொடர்ந்து கைதட்டிய சைந்தவி - வைரலாகும் வீடியோ இதோ
பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சமீபத்தில் விருது வாங்கும் போது சைந்தவி தொடர்ந்து கைத்தட்டிய வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே ஜிவி பிரகாஷ்-சைந்தவி பிரிய இருப்பதாக அறிவித்த செய்தி தான் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கோலிவுட்டில் மிக பிரபலமான இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் சாதித்து வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் இரு ஆஸ்கார் விருதுகளை அள்ளி வந்து பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஜிவி பிரகாஷ் அவர்கள் முதன்முதலாக 'வெயில்' என்ற படத்தில் இசை அமைத்து தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். அந்தப் படத்தில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். குறிப்பாக இந்த 2024 ஆம் ஆண்டு இவருக்கு நல்ல ஆண்டாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும். இந்த ஆண்டு இவர் இசையில் வெளிவந்த அனைத்து பாடல்களும் ஹிட் தான்.
ஜிவி பிரகாஷ் 2024:
இந்த ஆண்டு மட்டும் இவர் கேப்டன் மில்லர் தொடங்கி, தங்கலான், அமரன், லக்கி பாஸ்கர் என இசைக்காகவே தனி பாராட்டுகளைப் பெற்ற படங்களைக் கொடுத்து மக்களை பிரமிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக அமரன் படமும், லக்கி பாஸ்கர் படமும் ஒன்றாக தீபாவளிக்கு ரிலீஸானது. ஆனால், இந்த ரெண்டு படங்களின் பின்னணி இசையும், பாடல்களும் ரசிகர்களால் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தங்கலான் படத்தின் பின்னணி இசைக்கும் பெரும் பாராட்டுக்கள் குவிந்தது.
அமரன் திரைப்படத்திற்காக விருது வாங்க மேடை ஏறிய ஜி.வி பிரகாஷ்.. விருது வாங்கிக்கொண்டு கீழே இறங்கும் வரை கைகளை தட்டியபடி உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த சைந்தவி..!#GVPrakash | #Saindhavi | #Award | #Cinema pic.twitter.com/qwDhy2BRXn
— Polimer News (@polimernews) December 19, 2024
விருதை வென்ற ஜிவி பிரகாஷ்:
இதுமட்டும் இல்லாமல், 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தில் இவர் இயற்றி, ரீல் செய்யப்பட்ட 'கோல்டன் ஸ்பேரோவ்' பாடல் செம ஹிட் அடித்தது. இந்தநிலையில்,சமீபத்தில் 22 ஆவது சென்னை சர்வதேச திரைப்படத் திருவிழாவில், சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினை 'அமரன்' படத்திற்காக ஜிவி பிரகாஷ் குமார் வென்றார். இந்த விருதுதை அவருக்கு நடிகர் சங்கத் தலைவர் நாசர் உள்ளிட்ட பலர் இணைந்து வழங்கியிருந்தார்கள். ஜி வி பிரகாஷ் குமாரும் மகிழ்ச்சியோடு அந்த விருதை பெற்றுக் கொண்டார்.
கைதட்டிய சைந்தவி:
மேலும், ஜி வி பிரகாஷ் அவர்கள் விருதை பெறும் போது, மேடையில் அமர்ந்திருந்த அவரது முன்னாள் மனைவி சைந்தவி வெகு உற்சாகமாக தொடர்ந்து கைகளை தட்டிக் கொண்டிருந்தார். சைந்தவி அப்படி செய்தது பலரது கவனத்தை பெற்றுள்ளது. அதோடு ஜிவி விருதை பெரும் போது சைந்தவி கைத்தட்டி இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரும் பல வருடங்களாக காதலித்து கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.
இசை நிகழ்ச்சியில் சைந்தவி:
ஆனால், கடந்த மே மாதம் தாங்கள் இருவரும் பிரிவதாக இவர்கள் அறிவித்தது பலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனால், இவர்களின் விவாகரத்திற்கு பிறகு, சமீபத்தில் மலேசியாவில் நடந்த ஜி.வி பிரகாஷின் இசை கச்சேரியில் கூட சைந்தவி பங்கேற்று இருந்தார். அதனால் இவர்கள் இருவரும் விரைவில் இணைந்துவிடுவார்கள் என ரசிகர்கள் கூறி வந்தார்கள். தற்போது, விருது விழாவில் தனது முன்னாள் கணவருக்காக சைந்தவி வேகமாக கைத்தட்டி உற்சாகப்படுத்தியதைப் பார்த்த ரசிகர்கள், நீங்கள் இருவரும் விரைவில் சேர வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர்.