சக்திமான் காப்பாற்றுவார்ன்னு குழந்தைகள் அப்படி பண்ணப்ப - சக்திமான் எமோஷனல் பேட்டி
சக்திமான் ஹீரோ முகேஷ் கண்ணா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சின்னத்திரை சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. அதிலும் 90ஸ் சீரியல்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அந்த வகையில் 90ஸ் காலகட்டங்களில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியலாக திகழ்ந்தது சக்திமான்.
தற்போது இருக்கும் 2k கிட்ஸ்களுக்கு மார்வெல், டிசி என எத்தனையோ சூப்பர் ஹீரோ இருந்தாலும் இந்தியாவில் எல்லாவற்றுக்கும் முன்னோடியே இந்த ‘சக்திமான்’தான். இந்த சக்தி மான் தொடரை வைத்து 90 ஸ்கிட்ஸ்களைடைய பல்வேறு நிறுவனங்களும் வியாபாரம் செய்துள்ளது. சக்திமான் ஸ்டிக்கர்களை வாங்க பல்வேறு பொருட்களை வாங்கியது 90ஸ் கிட்ஸ்கள் தான் அதிகம். வீட்டின் கண்ணாடி, பீரோ, ரப் நோட் என்று சக்தி மான் ஸ்டிக்கர் இல்லாத ஒரு 90ஸ் கிட்ஸ்களை கூட பார்க்காமல் இருக்க முடியாது.
சக்திமான் தொடர்:
அந்த அளவிற்கு சக்திமான் மீது பயத்தியமாக இருந்தார்கள். சக்திமான் நாடகத்தால் ஈர்க்கப்பட்ட சிறுவர்கள் மொட்டை மாடியில் நின்று கொண்டு சக்திமான் போல சுற்றிவது, திருவிழாக்கள், நிகழ்ச்சிகள், பண்டிகை நாட்களெல்லாம் சக்திமான் உடையை போடுவது என்று அட்ராசிட்டி பண்ணார்கள். மேலும், சக்தி மான் தொடரில் சக்திமான் ஹீரோவாக நடித்தவர் முகேஷ் கண்ணா. இதை அடுத்து கடந்த ஆண்டு சக்திமான் தொடர் மீண்டும் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.
மீண்டும் சக்திமான்:
இது தொடர்பாக சக்திமான் ஹீரோ நடிகர் முகேஷ் கண்ணா வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். அதில் அவர், சக்திமான் கதாபாத்திரம் என்னுடைய மனதிற்கு ரொம்ப நெருக்கமானது. இந்த கதாபாத்திரத்தின் ஆடையை நான் எப்போதும் என்னுடனே வைத்திருக்கிறேன். மற்ற எல்லோரையும் விட மீண்டும் சக்திமானாக நடிப்பது எனக்கு ரொம்ப சந்தோஷமே உற்சாகத்தையும் அளிக்கிறது. 1997 இல் தொடங்கிய 2005 வரை சக்திமான் கதாபாத்திரத்தில் நடித்தேன்.
முகேஷ் கண்ணா பேட்டி:
தற்போது 2027 இல் உள்ள இன்றைய தலைமுறைக்கும் இந்த கதாபாத்திரம் கொண்டு போய் சேரும். கூடிய விரைவில் இந்த தொடர் வெளியாகும் என்று கூறியிருந்தார். இதற்கிடையில் சக்திமான் காப்பாற்றுவார் என்று மாடியில் இருந்து சிறுவர்கள் குதித்த சம்பவம் இந்தியாவை உலுக்கி இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் இது தொடர்பாக நீண்ட இடைவெளிக்கு பிறகு சக்திமான் ஹீரோ முகேஷ் கண்ணா பிரபல சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், சக்திமான் வருவான் என்று சிறுவர்கள் மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்த இருந்த சம்பவம் என்னை ரொம்பவே பாதித்தது.
வாழ்க்கையில் பட்ட கஷ்டம்:
இதனால் நான் கோர்ட்டு, கேஸ் என்று ஆறு மாதம் அலைந்தேன். அதை தொடர்ந்து சிறுவர்கள் நெருப்பில் சிக்கிக் கொண்டு சக்திமான் காப்பாற்றுவார் என்று நிறைய இந்த மாதிரி சம்பவங்கள் நடந்திருக்கிறது. இதனால் நான் ரொம்பவே மனதளவிலும் பாதித்து இருக்கிறேன். நான் நிறைய பிரச்சினைகளையெல்லாம் சந்தித்தேன். அந்த அளவிற்கு குழந்தைகள் என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். பின் மீது தவறு இல்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டது என்று எமோஷனலாக கூறி இருக்கிறார்.