'அவர் மட்டும் இருந்திருந்தா' - மறைந்த நடிகர் மயில்சாமியை நினைவுகூரும் சாலிகிராம மக்கள்.
மறைந்த நடிகர் மயில்சாமியின் பிறந்தநாளுக்கு அவருடைய ரசிகர்கள் செய்திருக்கும் செயல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மறக்க முடியாத நடிகர்களில் மயில்சாமி ஒருவர். இவர் நடிகர், காமெடியன், நிகழ்ச்சி தொகுப்பாளர், சமூக சேவகர் என்ற பன்முகங்களை கொண்டவர். இவர் 1985 ஆம் ஆண்டு கன்னிராசி படத்தில் டெலிவரி பாய் என்ற வேடத்தில் நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இவர் ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ் என்று பல நடிகர்களை தொடர்ந்து இன்றைய தலைமுறை நடிகர்களான விஜய், அஜித், விக்ரம், சூர்யா, விஷால் என்று பல நடிகர்களின் படத்திலும் நடித்திருக்கிறார். இதுவரை இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இறுதியாக உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி மற்றும் ஆர் ஜே பாலாஜி நடித்த வீட்ல விசேஷங்க போன்ற படங்களில் மயில்சாமி நடித்திருந்தார்.
மயில்சாமி திரைப்பயணம்:
சமீப காலமாக இவரை அதிக படங்களில் காண முடியவில்லை. மேலும், இவர் நடிகராக மட்டுமில்லாமல் தீவிர அரசியல்வாதியும் ஆவர். ஜெயலலிதாவின் மரணத்துக்கு முன்பு வரை அ.தி.மு.க-வில் இருந்ததார் நடிகர் மயில்சாமி. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, அ.தி.மு.கவிலிருந்து ஒதுங்கி அமைதியாக இருந்தார். பின் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இவர் சுயேச்சையாகப் போட்டியிட்டார் மயில்சாமி. ஆனால், இவர் தேர்தலில் தோற்றார்.
https://twitter.com/Rajan0080419361/status/1732403977814425664
மயில்சாமி குறித்த தகவல்:
இப்படி இருக்கும் சில மாதங்களுக்கு முன் சிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிய போது அவருக்கு திடீர் மரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து இருக்கிறது. ஏற்கனவே இவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருந்தது.
மயில்சாமி மரணம்:
அதோடு மயில்சாமி தீவிர சிவ பக்தர், இவர் ஒவ்வொரு கார்த்திகை தீபத்திற்கு திருவண்ணாமலைக்கு சென்று சிவனை வழிபடுவதும் வழக்கம். ஆக, இவர் சிவராத்ரி அன்று மாரடைப்பால் மரணமடைந்தார். இவருடைய இழப்பு ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இவரின் மறைவிற்கு இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். மேலும், இவர் சினிமாவை தாண்டியும் பல சமூக சேவைகளை செய்திருக்கிறார்.
https://twitter.com/DivinityJudo/status/1732333395630567663
மயில்சாமி பிறந்தநாள்:
அது மட்டும் இல்லாமல் உதவி என்று யார் கேட்டாலுமே இல்லை என்று சொல்லாமல் உதவி செய்து இருக்கிறார். உதவி செய்ய பணம் தேவையில்லை மனமிருந்தால் போதும் என்று பல இடங்களில் கூறியிருக்கிறார். இதனாலே இவருடைய மறைவு ரசிகர்கள் மத்தியில் ஒரு ஆராத ரணத்தை தந்திருக்கிறது. இந்த நிலையில் இன்று நடிகர் மயில்சாமியின் பிறந்தநாள். இதனால் ரசிகர்கள் அவருடைய போட்டோவிற்கு மாலை அணிவித்து அவருடைய பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்கள்.