கத்ரீனாவிற்கு கோடிகளில் செலவழித்து முன்னாள் காதலர்கள் கொடுத்த திருமணப் பரிசை பாருங்க.

By subhashini · 16/12/2021

கத்ரீனா கைப்பின் முன்னாள் காதலர்களான சல்மான் கான் மற்றும் ரன்வீர் கபூர் ஆகிய இருவரும் கொடுத்துள்ள திருமண பரிசு ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது. பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்பவர் கத்ரீனா கைஃப். இவர் ஹிந்தி மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து உள்ளார். மேலும், கத்ரீனா கைப்பும், விக்கி கவுசாலும் நீண்டகாலமாக காதலித்து வந்திருக்கிறார்கள். பின் அனைவரும் எதிர்பார்த்திருந்த இவருடைய திருமணம் ராஜஸ்தானில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. பல விதிமுறைகள், கட்டுப்பாடுகளுடன் பல கோடி செலவில் பிரம்மாண்டமாக இவர்களுடைய திருமணம் நடந்து முடிந்தது.

பிரம்மாண்ட திருமணம் :

இந்த திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் யாரும் புகைப்படம் எடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதே போல இந்த திருமணத்தில் கலந்துகொண்ட அனைவரின் செல்போன்களும் கைப்பற்றப்பட்டு பின்னரே அவர்கள் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதுமட்டும் இல்லாமல் இவர்களுடைய திருமணத்தை படம் பிடித்து ஒளிபரப்ப பிரபல நிறுவனத்திடம் 80 கோடி ரூபாயில் விலை பேசி இருந்தார்கள். கத்ரீனாவின் திருமணத்திற்கு ரசிகர்களும், பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்கள்.

முன்னாள் காதலர்களுக்கு அழைப்பு இல்லை :

இந்த திருமணத்தில் மிக முக்கிய நபர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். ஆனால், பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரும், கத்ரீனா கைஃபின் முன்னாள் காதலருமான நடிகர் ரன்பீர் கபூர், மற்றும் சல்மான் கான் ஆகியோருக்கு அழைப்பு விடுக்க வில்லைணையதள ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த சல்மான் கானின் சகோதரி அர்பிதா கான், கத்ரீனா மற்றும் விக்கியின் திருமணத்திற்கு, தனக்கும், சல்மான் கானுக்கும் எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை, என்பதை உறுதி படுத்தி இருந்தார்.

சல்மான் கான் கொடுத்த பரிசு

சல்மான் கான் காதலித்து பிரிந்த பின்னரும் நல்ல நட்பில் இருந்தனர். தொடர்ந்து பல படங்களில் இவர் கானுடன் பணியாற்றியும் வந்தார். அதே போல் சல்மான் கான் சகோதரி திருமணத்திலும் கடந்த 2014 ஆம் ஆண்டு கலந்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே. அதே போல அதே போல் கத்ரீனா தனது முன்னாள் காதலரும், நடிகரும் ரன்பீர் கபூருக்கும் அழைப்பு கொடுக்கப்படவில்லை. . ஆறு வருடங்களுக்கும் மேலாக காதலித்து வந்த கத்ரீனாவும் ரன்பீரும் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கூறப்படுகிறது.

ரன்பீர் கபூர் கொடுத்த பரிசு

ஜக்கா ஜாசூஸ் படப்பிடிப்பின் போது, லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் கத்ரீனா கைஃப்பின் திருமண பரிசாக நடிகர் சல்மான் கான், 3 கோடி ரூபாய் மதிப்புள்ள ange Rover car ஒன்றை பரிசாக வழங்கியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதே போல மற்றொரு முன்னாள் காதலரான ரன்வீர் கபூர் 2. 7 கோடி மதிப்பிலான வைர நெக்லெஸ் ஒன்றை பரிசாக வழங்கி இருக்கிறாராம்.

திருமணத்திற்காக நடிகை கத்ரீனா கைஃப் அணிந்திருந்த உடை விலை மட்டுமே 17 லட்சம் என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு திருமணத்திற்காக அந்த உடையில் டிசைன் செய்து கொண்டு வரப்பட்டதாம். அதேபோல் கத்ரீனாவுக்காக ஸ்பெஷலாக Sojat மெஹந்தி போட்டார்கள். இது ஜோத்பூரில் உள்ள பாலி எனும் இடத்திலிருந்து கொண்டு வரப்பட்டது. இந்த மெகந்தி இயற்கையான முறையில் உருவாக்கபடுவதாகவும், இதில் எந்த கெமிக்கல் கலக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த மெஹந்தியின் விலை ஒரு லட்சம் ரூபாய் என்றும் தகவல்கள் வெளியானது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full