'டிக் டாக்' - அஜித் படங்களில் சிறந்த படமே இதான். சென்னை வந்த சல்மான் கான் பேச்சு.

By Rajkumar · 21/12/2019

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக விளங்கியவர் நடிகர் பிரபு தேவா. இவர் சினிமா உலகில் நடிகர் மட்டும் இல்லாமல் நடன இயக்குனர், திரைப் பட இயக்குனர், திரைப் பட தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர். பிறமொழி படங்களை தமிழில் டப் செய்வதும், ரீமேக் செய்வதும் வழக்கமான ஒன்று. தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கானை வைத்து நடிகர் பிரபு தேவா அவர்கள் "தபாங் 3" என்ற படத்தை இயக்கி உள்ளார். இது நடிகர் பிரபு தேவா இயக்கும் 14வது படம் ஆகும். மேலும், இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி பட்டய கிளப்பி உள்ளது. மேலும், தபாங் படத்தின் முந்தைய இரண்டு பாகங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. நடிகர் சல்மான் கான் அவர்கள் தனது சகோதரர் அர்பாஸ் கான் உடன் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளார். இந்த படத்தில் சல்மான்கான், சோனாக்‌ஷி சின்ஹா, கன்னட நடிகர் சுதீப், மஹி ஹில் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.

சமீபத்தில் தான் இந்த படத்தின் படக்குழுவினர் அனைவரும் சென்னைக்கு வந்து புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்கள். அப்போது நடிகர் சல்மான்கான் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்து இருந்தார். அதில் ஒருவர் அஜித் புகைப்படத்தை காட்டி இவரை பற்றி ஏதாவது ஒரு சில வார்த்தைகள் கூறுங்கள் என்று கேட்டு உள்ளார். அதற்கு சல்மான்கான் அவர்கள் கூறியது, 'டிக் டாக்' என்று சிக்னல் கொடுத்து வாலி தான் அவர் நடித்ததில் சிறந்த படம் என்று கூறி இருந்தார். மேலும், இவர் பேசியிருக்கும் ப்ரோமா ஒன்று வெளியாகி உள்ளது.

அதுமட்டும் இல்லாமல் இந்த ப்ரமோஷன் நிகழ்ச்சியை முழுவதுமாக பார்த்தால் தான் சல்மான்கான் என்ன பேசி உள்ளார் என்பது தெரியும் பொறுத்திருந்து பார்க்கலாம். அது மட்டும் இல்லாமல் தமிழில் 'ஒஸ்தி' என்ற பெயரில் நடிகர் சிம்பு அவர்கள் தவாங் படத்தின் முதல் பாகத்தை ரீமேக் செய்யப்பட்டு எடுக்கப்பட்டது. ஆனால், அந்த படம் படுதோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ‘ஸ்ட்ரீட் டான்ஸர் 3டி’ என்ற திரைப் படத்தில் நடிகர் பிரபு தேவா அவர்கள் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

மேலும், இந்த படம் குறித்த தகவலை அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்தார்கள். அதோடு ஸ்ட்ரீட் டான்ஸர் 3டி படத்தின் டிரெய்லர் சில தினங்களுக்கு முன்பு தான் வெளியாகி உள்ளது. டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று உள்ளது. ரெமோ டிஸோஸா அவர்கள் தான் இந்த படத்தை இயக்கி உள்ளார். இந்தத் திரைப் படத்தில் வருண் தவான், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். மேலும், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த படம் வெளி வர உள்ளதாக தகவல் வந்து உள்ளது.

behindtalkies AMP · Quick view
View full