ஹேட்டர்ஸ்க்கு நடிகை சமந்தா கொடுத்த நச் பதிலடி - என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க

ஹேட்டர்ஸ்க்கு நடிகை சமந்தா கொடுத்த பதிலடி

By subhashini · 9/6/2026

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'மா இன்டி பங்காரம்'.

இந்த படத்தில் சமந்தா ஒரு சாதாரண குடும்ப தலைவியாக இருப்பது மட்டுமில்லாமல் கொடுமைக்கும் அநீதிக்கும் எதிராக போராடும் ஒரு வலிமையான பைட்டராகவும் மிரட்டி இருக்கிறார். ஒரு காமெடி கலந்த ஆக்சன் டிராமாவாக இந்த படம் உருவாகி இருக்கிறது. சமந்தாவின் கதாபாத்திரம் இந்த படத்தில் பல பரிமாணங்களில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை நந்தினி ரெட்டி தான் இயக்கியிருக்கிறார்.

சமந்தா குறித்த தகவல்:

அதோடு இந்த படத்தில் கன்னடாவின் பிரபல நடிகர் திகாந்த் மன்சாலே இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் குல்ஷன் தேவையா, கௌதமி தடிமல்லா, ஸ்ரீமுகி மற்றும் மஞ்சுஷா ஆகியோரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் சமந்தா தன்னுடைய கணவருடன் சேர்ந்து தன்னுடைய சொந்த பேனரில் தயாரித்திருக்கிறார்.

ரசிகர் கேள்வி:

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் இந்த படம் ஜூன் 19ஆம் தேதி திரையரங்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க சமந்தா எப்போதுமே சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் ரசிகர்களுடைய கேள்விக்கு சமந்தா பதில் அளித்து இருக்கிறார். அப்போது ரசிகர் ஒருவர், உங்களை வெறுப்பவர்களை ஒரே வார்த்தையில் எப்படி விவரிப்பீர்கள்? என்று கேட்டிருக்கிறார். அதற்கு சமந்தா, ஹேட்டர்ஸ்-ஆ? யாருடைய ஹேட்டர்ஸ்? எனக்கெல்லாம் ஹேட்டர்ஸ் இருக்காங்களா என்ன? என்று ஜாலியாக பதில் சொல்லி இருக்கிறார்.

சமந்தா கொடுத்த விளக்கம்:

அதுமட்டுமில்லாமல் இந்த உரையாடலில் சமந்தா ஒரு மிகப்பெரிய சீக்ரெட்டையும் சொல்லி இருக்கிறார். அதாவது, மா இன்டி பங்காரம் படத்தினுடைய கதாநாயகி தேர்விற்கு முதலில் நடிகை சாய் பல்லவியை தான் தேர்வு செய்தார்கள். ஆனால், சாய் பல்லவினுடைய டேட்ஸ் பிரச்சனை காரணமாகத்தான் அந்த வாய்ப்பு சமந்தாவிற்கு வந்திருக்கிறது. இதைப்பற்றி தான் சமந்தா எமோஷனலாக பேசி இருந்தார். அதோடு இனி வரும் காலத்தில் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் சாய் பல்லவி உடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் சமந்தா கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full