தெலுங்கு சினிமாவுல ஹேமா கமிட்டி போல அறிக்கை வெளியிடுங்க- அரசுக்கு சமந்தா வைத்த வேண்டுகோள்

By subhashini · 1/9/2024

சமீப காலமாகவே சினிமாவில் பெண்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் என்ற பெயரில் பாலியல் தொல்லை கொடுப்பது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் மலையாள சினிமாவிலும் இந்த மாதிரி நிறைய நிகழ்வுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு சினிமா துறையில் இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான பிரச்சினைகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று கேரள மாநில அரசு அமைத்திருந்தது.

பின் இது தொடர்பாக விசாரணையும் நடத்தி இருந்தார்கள். அதனை அடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு முதலமைச்சர் பினராய் விஜயன் இடம் 233 பக்க அறிக்கை ஆவணங்கள், ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரத்துடன் சமர்ப்பித்து இருந்தார்கள். ஆனால், இதை பல காரணங்களால் வெளியிடாமல் இருந்தது. பின் கடந்த 19 ஆம் தேதி ஹேமா கமிட்டி அறிக்கையை அரசு வெளியிட்டது. இது மலையாள திரை உலகில் மிகப்பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், நிறைய பெண்கள் அட்ஜஸ்ட்மெண்ட் என்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது.

ஹேமா கமிட்டி அறிக்கை:

இது குறித்து கேரள சினிமாவில் பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கிறது. மேலும், இது தொடர்பாக பிரபலங்கள் பலருமே தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால், இந்த ஹேமா கமிட்டி விவகாரம் தொடர்பாக இதுவரை மலையாள திரை உலகின் சூப்பர் ஸ்டார்களான மோகன்லால், மம்மூட்டி எதுவுமே பேசவில்லை. இதை அடுத்து மலையாள திரைப்பட சங்கமான அம்மா சில தினங்களுக்கு முன்பு தான் கலைக்கப்பட்டது. பாலியல் புகார் குறித்து ஆலோசிக்க அம்மா சங்கம் கூடுவதாக இருந்த நிலையில் மோகன்லால் உட்பட 17 நிர்வாகிகள் ராஜினாமா செய்து விலகி விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால் சொன்னது:

இதை அடுத்து பலரும் கேள்வி எழுப்பி இருந்தார்கள். அதோடு நடிகைகள் பலருமே முன்னணி நடிகர்களின் மீது புகார்கள் அளித்து வருகிறார்கள். போலீஸ் இது தொடர்பாக தீவிரமாக விசாரித்து விசாரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவிலும் நடிகைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஹேமா கமிட்டி போல் ஒரு குழு அமைக்க வேண்டும் என்று நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் கூறி இருக்கிறார். அதோடு இன்னும் சில தினங்களில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

சமந்தா பதிவு:

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நடிகை சமந்தா அவர்கள் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ஹேமா கமிட்டி போல தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லைகள் தொடர்பாக விசாரணை நடத்தி தெலுங்கானா அரசு அறிக்கை வைக்க வேண்டும். அந்த அறிக்கையின் மூலம் தான் பெண்களுக்கான பாதுகாப்பான சூழல் அமையும் என்று கூறியிருக்கிறார். அதோட தெலுங்கு சினிமாவிலேயே பெண்களுக்காக குரல் கொடுத்த முதல் நடிகை சமந்தா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு சினிமா குறித்து சொன்னது:

இதன் மூலம் தெலுங்கு திரை உலகிலும் நடக்கும் பாலியல் கொடுமைகளும் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கடந்த 2019 ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் பெண்களுக்காக வாய்ஸ் ஆப் ஓப்பன் என்ற பெயரிலேயே குழு ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. அந்த குழுவில் சமந்தாவும் இருந்திருந்தார். அந்த குழு சார்பில் வெளியிட்ட அறிக்கை தான் சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full