அவர்களை எல்லாம் நான் ப்ளாக் செய்து விட்டேன் - நடிகை சமந்தா கொடுத்த பதிலடி
தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, சில வருடத்திற்கு முன் சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.
கடந்த ஆண்டு தான் இவர் அந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வந்தார். தற்போது இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது சமந்தா அவர்கள் மா இன்டி பங்காரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இவரே தயாரிக்கிறார். இந்த படத்தை நந்தினி ரெட்டி இயக்குகிறார். இந்த படம் வருகிற மே 15ஆம் தேதி திரைக்கு வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நெகட்டிவ் கமெண்ட் குறித்து சமந்தா கூறியிருந்தது, நான் ஸ்கூல் படிக்கும்போது டைம் டேபிள் போட்டு தான் படிப்பேன்.
சமந்தா பேட்டி:
அதனால் எந்த ஒரு கவனச் சிதறலு ஏற்படாது. இப்போது அப்படி இருக்க முடியுமா என்று தெரியவில்லை. ரில்ஸ் பார்ப்பதால் வரும் பியர் ஆப் மிஸ்ஸிங் அவுட் பயம் ரொம்பவே மோசமானது. அதனால்தான் நான் என் இன்ஸ்டாகிராமை லாக் செய்து விட்டேன். வேண்டுமென்றே போரிங் ஆன மற்ற விஷயங்களை எல்லாம் செய்வேன். என்னை பற்றி நெகட்டிவாக பேசுவார்கள். நான் உடனே பிளாக் செய்து விடுவேன். அதனால் நான் நெகட்டிவ் கமெண்ட் பற்றி பெரிதாக யோசிப்பதில்லை என்று கூறியிருக்கிறார்
சமந்தா குறித்த தகவல்:
இதற்கிடையில் சமந்தா அவர்கள் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து இருந்தார். பின் நான்கு ஆண்டுகளில் இருவரும் பிரிந்து விட்டார்கள். விவாகரத்திற்கு பின் சமந்தா தன் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும், சில மாதங்களாக சமந்தா இயக்குனர் ராஜ் நிடிமோருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பலரும் இருவரும் காதலிப்பதாக சொல்லி வந்தார்கள். ஆனால், இதற்கு இருவருமே மறுப்பு தெரிவிக்கவில்லை. ஒத்துக்கொள்ளவும் இல்லை.
சமந்தா திருமணம்:
இதனால இவர்கள் இருவருடைய உறவு பற்றி சோசியல் மீடியாவில் காட்டு தீயை போல ஏதாவது ஒரு செய்தி வந்து கொண்டிருக்கிறது. மேலும், சமந்தாவுக்கும் ராஜ் நிடிமோருவுக்கும் கோவையில் உள்ள ஈசா யோகா மையத்தில் தான் திருமணம் செய்திருந்தார்கள். இது இவர்கள் இருவருக்கும் இரண்டாவது திருமணம். இவர்களுடைய திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டிருக்கிறார்கள்.