நான் மேடைகளில் கண்கலங்கி எமோஷனல் ஆக இது தான் காரணம் - நடிகை சமந்தா வெளியிட்ட வீடியோ

By subhashini · 6/5/2025

தன்னை பற்றிய சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுத்து நடிகை சமந்தா போட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க, கடந்த இரண்டு வருடமாகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்தார். இது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இதனால் இவர் சுமார் ஒரு வருடம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். கடந்த ஆண்டு தான் சமந்தா மீண்டும் நடிக்க வந்தார். தற்போது இவர் எல்லா மொழி படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சமந்தா பாலிவுட் வெப் தொடரில் நடித்திருந்தார்.

சமந்தா திரைப்பயணம்:

பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் சேர்ந்து Citadel : Honey Bunny என்ற வெப் தொடரில் சமந்தா நடித்திருந்தார். இதில் ஆக்ஷன் காட்சிகளில் சமந்தா நடித்திருந்தார். இதில் வெப் சீரியஸை ராஜ் & டிகே இயக்கத்தில் உருவாகி இருந்தது. இவர் ஏற்கனவே சமந்தாவை வைத்து பேமிலி மேன் 2 என்ற வெப் சீரிஸை எடுத்திருந்தார். இந்தத் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதை தொடர்ந்து சமந்தா படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

தயாரிப்பாளர் சமந்தா:

தற்போது சமந்தா அவர்கள் தயாரிப்பாளராக உருவெடுத்து இருக்கிறார். பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கத்தில் சமந்தா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் சுபம். இது தெலுங்கு படம். இந்த படம் மே ஒன்பதாம் தேதி திரையரங்கில் வெளியாகியிருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தினுடைய வெளியீட்டு நிகழ்வு விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் சமந்தா கலந்து கொண்டிருந்தார். அப்போது விழாவில் சமந்தா, நான் எப்போது விசாகப்பட்டினம் வருகிறேனோ அப்போதெல்லாம் ஒரு பிளாக்பஸ்டர் படம் வந்துவிடும்.

சமந்தா பேட்டி:

விசாகப்பட்டினத்தில் தான் பிஜிலி, ஓ பேபி போன்ற படங்கள் எல்லாம் படமாக்கப்பட்டது. அந்த படங்களும் ஹிட் அடித்தது. ஒரு தயாரிப்பாளராக இந்த படத்தை திய யோசனை உடன் தொடங்கி இருக்கிறேன். இந்த படமும் ஹிட் கொடுக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, சமீப காலமாகவே சமந்தா மேடையில் கண்கலங்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகுவது அனைவரும் அறிந்ததே. விவாகரத்தினால் தான் சமந்தா ரொம்ப மனமடைந்து இருக்கிறார். அதனால் தான் அவரை அறியாமல் அழுகிறார் என்றெல்லாம் கூறியிருந்தார்கள்.

https://www.youtube.com/watch?v=1Rz5hOExLzs

சமந்தா கண்கலங்கும் வீடியோ:

இந்நிலையில் இது தொடர்பான சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா வீடியோ ஒன்று பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர், மேடையில் நான் கண்கலங்கி துடைப்பதற்கு காரணம் எமோசனலாக இருக்கிறேன் என்று சொல்கிறார்கள். ஆனால், அது உண்மை கிடையாது. என்னுடைய கண்களில் அதிகமான வெளிச்சம் பட்டால் சென்சிட்டிவ் ஆகி கண்ணீர் வந்துவிடும். இதனால்தான் என் கண்களில் கண்ணீர் வருகிறது. நான் நன்றாகவும், மகிழ்ச்சியாகவும், ஆர்வத்துடனும் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full