தனது பதிவுகளில் டிஸ்கிளைமர் போட ஆரம்பித்த சமந்தா - இவர்தான் காரணமோ?
நடிகை சமந்தா தன் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்த ஆரோக்கியம் குறித்த பாட் காஸ்டில் முதல்முறையாக டிஸ்கிளைமர் போட்டிருக்கும் விஷயம் தான் தற்போது வைரலாக்கப்பட்டு வருகிறது. தென்னிந்திய சினிமாவில் 12 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் சமந்தா. சமீபத்தில் சமந்தா சுவாசப் பிரச்சனை இருப்பவர்கள் வாய் வழியாக உறிஞ்சும் முறையான ஹைட்ரஜன் பெராக்ஸைடு நெபுலைசேஷனை எடுங்கள் என பரிந்துரைத்திருந்தார்.
இவர் இப்படி போட்ட பதிவுக்கு சோசியல் மீடியாவில் நிறைய சர்ச்சைகள் கிளம்பியது. இதற்கு பலருமே கண்டனம் தெரிவித்து வந்தார்கள். அந்த நிலையில் லிவர் டாக் என்ற மருத்துவர் சமந்தாவின் கருத்தை கண்டித்து பதிவு ஒன்று போட்டிருந்தார். அதில் அவர், சுவாச வைரஸ் தொற்றுக்களை தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் ஹைட்ரஜன் பெராக்சைடு சுவாசிக்க வேண்டும் என்று சமந்தா கூறி இருக்கிறார். அது நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தான ஒன்று. அதனால் இவருக்கு அபராதம் அல்லது சிறை தண்டனை கொடுக்க வேண்டும்.
முதல் முறையாக டிஸ்கிளைமர்:
மேலும் மருத்துவம் தொடர்பாக அவருக்கு சிறந்த ஆலோசகர் தேவை என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது சமந்தா, தனது உடல் நலம் சார்ந்த பாட்காஸ்டில் டிஸ்கிளைமரை சேர்க்கத் தொடங்கியுள்ளார். சமீபத்தில் தனது பாட்காஸ்டின் எபிசோடில், இயற்கை மருத்துவர், எழுத்தாளருமான டேவிட் ஜாக்கர்ஸுடன் ஆரோக்கியம் குறித்து விவாதித்திருக்கிறார். தற்போது அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அவர், அனைத்து எபிசோட்களுக்கும் ரீல்களுக்கும் ஒரு டிஸ்கிளைமரை சேர்க்கத் தொடங்கியுள்ளார்.
டிஸ்கிளைமரில் இருப்பது:
அதில், ' Information purposes only' , அதாவது 'தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே' என்ன தெளிவுபடுத்தியுள்ளார். அதற்குக் காரணம், ஹைட்ரஜன் பெராக்சைட் சர்ச்சையாக இருக்கலாம் என்று பலரும் கூறி வருகின்றனர். மேலும் அதில், இந்த அத்தியாயத்தில் உள்ள ஆடியோ, உரை, கிராபிக்ஸ், படங்கள், மற்றும் பிற பொருள்கள், அவை மட்டுமல்லாத தகவல்கள், வெறும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இந்த அத்தியாயத்தில் உள்ள எந்த பொருளும் தொழில் முறை மருத்துவ ஆலோசனை, நோய் அறிதல் அல்லது சிகிச்சைக்கு மாறாக இருப்பதில்லை.
சமந்தாவின் அட்வைஸ் :
ஒரு மருத்துவ நிலை அல்லது சிகிச்சையை பற்றி உங்களுக்கு ஏதேனும் கேள்விகள், மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் மற்றும் ஒரு புதிய மருத்துவ சிகிச்சையை மேற்கொள்வதற்கு முன்பு உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுங்கள். மேலும் இந்தப் பாட்காஸ்டில் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயங்களுக்காக தொழில் முறை மருத்துவ ஆலோசனையை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். சமந்தாவின் இந்த டிஸ்கிளைமருக்கு, மருத்துவர் லிவர் டாக்கின் சர்ச்சையாக கூட இருக்கலாம் என்று பலரும் கூறி வருகின்றனர்.
சமந்தா குறித்து:
சமீபத்தில் மயோசிட்டிஸ் நோய் பாதிப்பின் காரணமாக நடிகை சமந்தா ஓய்வு எடுத்து வந்தார். கடைசியாக இவர் 2023 ஆம் ஆண்டு 'குஷி' என்னும் படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. தற்போது சமந்தா நடிப்பில் 'சிட்டாடல்: ஹனி பன்னி' என்ற வெதப்தொடர் விரைவில் ரிலீசாக உள்ளது. மேலும், சமந்தா தெலுங்குவில் 'மா இன்டி பங்காரம்' என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.