விவாகரத்து குறித்த வதந்தி, கண்டித்த சமந்தா - முன்னாள் மனைவிக்கு குரல் கொடுத்த நாக சைதன்யா
தங்களின் விவாகரத்து குறித்து பெண் அமைச்சர் கொடுத்த குற்றச்சாட்டுக்கு சமந்தா- நாக சைதன்யா கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. நாக சைதன்யா- சமந்தா இருவரும் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா-நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிந்திருந்தார்கள்.
இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதுவரை இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை? ஏன் பிரிந்தார்கள்? என்று எந்த விவரமும் தெரியவில்லை.
பிரிவிற்கு பின் சமந்தா தன் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபிதாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக சோசியல் மீடியாவில் வதந்திகள் பரவி இருந்தது. சமீபத்தில் தான் நாக சைதன்யா-சோபிதா நிச்சயதார்த்தம் நாக சைதன்யாவின் வீட்டில் நடந்தது. கூடிய விரைவில் இவர்களின் திருமண தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது.
அமைச்சர் கொண்டா சுரேகா பேட்டி:
சிலர் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தாலும், சிலர் நாக சைத்தன்யாவை விமர்சித்து வருகிறார்கள்.
இப்படி இருந்துமே நாக சைதன்யா- சமந்தா குறித்த ஏதாவது ஒரு செய்தி இணையத்தில் வைரலாக்கப்பட்டு தான் வருகிறது. அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தின் அமைச்சர் கொண்டா சுரேகா அண்மையில் அளித்த பேட்டியில், சமந்தா-நாக சைதன்யா விவாகரத்திற்கு KT ராமா ராவ் தான் காரணம். KT ராமா ராவ் செய்த விஷயங்களால் தான் பல நடிகைகள் திருமணம் செய்து கொண்டு தெலுங்கு சினிமாவை விட்டு போய்விட்டார்கள் என்றெல்லாம் பேசி இருந்தார்.
ఎన్ కన్వెన్షన్ ను కూల్చివేయకుండా ఉండాలంటే
— BIG TV Breaking News (@bigtvtelugu) October 2, 2024
సమంతను తన దగ్గరకు పంపాలని కేటీఆర్ డిమాండ్ చేశాడు : కొండా సురేఖ
సమంతను కేటీఆర్ దగ్గరకు వెళ్లమని నాగార్జున వాళ్లు ఒత్తిడి చేశారు.
సమంత అందుకు ఒప్పుకోలేదు.
దీంతో వెళితే వెళ్లు లేదంటే లేదు అని సమంతకు విడాకులు ఇచ్చారు.
మంత్రి కొండా… pic.twitter.com/VXlxgYWKpG
நாகார்ஜுனா டீவ்ட்
இப்படி இவர் பேசியிருந்தது இணையத்தில் மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருக்கிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடிகர் நாகார்ஜுனா டீவ்ட் ஒன்று போட்டிருந்தார். அதில் அவர், உங்கள் அரசியலுக்காக சினிமா நடிகர்களுடைய வாழ்க்கையை பயன்படுத்தாதீர்கள். அடுத்தவர்களுடைய பிரைவசிக்கும் மதிப்பு கொடுங்கள். பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண் இப்படி என் குடும்பத்தை பற்றி பொய்யான குற்றச்சாட்டு வைப்பது சரியில்லை. உங்கள் கருத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என்று கோபமாக பதிலளித்திருந்தார்.
சமந்தா போஸ்ட்:
இதை அடுத்து பிரபலங்கள் பலருமே அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக நடிகை சமந்தா, என்னுடைய விவாகரத்து பர்சனல் மேட்டர். யாரும் அதைப்பற்றி யூகங்களின் அடிப்படையில் பேச வேண்டாம். நாங்கள் அதைப் பற்றி வெளிப்படையாக பேசவில்லை என்றால் அதற்காக நீங்கள் தவறாக பேசாதீர்கள். எங்களுடைய விவாகரத்து mutual consent அடிப்படையில் நடந்தது. அதில் எந்த அரசியல் சதியும் கிடையாது. என் பெயரை உங்கள் அரசியல் பிரச்சனையில் இருக்காதீங்க. நான் இதுவரை அரசியல் தொடர்பு இல்லாமல் தான் இருக்கிறேன். அதே போல் தான் இருக்க விரும்புகிறேன் என்று கோபமாக பதிலளித்திருக்கிறார்.
நாக சைதன்யா பதிவு:
இவரை தொடர்ந்து சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா, வாழ்க்கையில் விவாகரத்து என்பது ரொம்ப வேதனையான, துரதிஷ்டவசமான முடிவுகளில் ஒன்று. பல யோசனைகள் பிறகு தான் நானும், என்னுடைய முன்னாள் மனைவியும் பிரிய முடிவெடுத்தோம். மரியாதையுடனும், கண்ணியத்துடனும் முன்னேற வேண்டும் என்பதற்காக நாங்கள் அமைதியான முறையில் எடுத்த முடிவு இது. இந்த விஷயத்தில் பல ஆதாரமற்ற கிசுகிசுக்கள் வந்திருக்கிறது. என்னுடைய முன்னாள் மனைவி மற்றும் என்னுடைய குடும்பத்தினர் மீதுள்ள மரியாதை காரணமாக நான் இதையெல்லாம் பற்றி பேசாமல் அமைதியாக இருந்தேன். பெண் அமைச்சர் வைத்த குற்றச்சாட்டு பொய்யானது. அது மட்டும் இல்லாமல் அது முற்றிலும் கேலிக்குரியது, ஏற்றுக்கொள்ள முடியாது. ஊடக தலைப்புச் செய்திகளுக்காக பிரபலங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பயன்படுத்திக் கொள்வது வெட்கக்கேடானது என்று கூறியிருக்கிறார்.