'நான் செத்துருவேன்னு' - பேட்டியின் இடையில் கண்ணீர் விட்ட சமந்தா. வீடியோவை கண்டு ரசிகர்கள் ஆறுதல்.

By Siva · 8/11/2022

இப்போது என்னுடைய நிலை உயிருக்கு ஆபத்தானது அல்ல. நான் இன்னும் இறக்கவில்லை சமந்தா பேட்டியில் கலங்கி பேசி இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாகமாக டாப் நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சமீப காலமாகவே சமந்தா அவர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இதனிடையே இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து இருந்தார். இருவரும் மிக சிறந்த ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா -நாகா சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பின் இவர்கள் இருவரும் தங்களுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

சமந்தாவின் யசோதா :

இவர் சாகுந்தலம், திரில்லர் கதை அம்சம் கொண்ட படம், ஹாலிவுட் படம், குஷி போன்ற பல படத்தில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். மேலும், சாகுந்தலம் படம் நவம்பர் நான்காம் தேதி திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து சமந்தாவின் யசோதா பட ட்ரைலர் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் ‘யசோதா’. இந்த படத்தில் சமந்தாவுடன் இணைந்து வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா சர்மா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் நவம்பர் 11ம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

https://twitter.com/sekartweets/status/1589832829961396225

சமந்தாவிற்கு Myositis பாதிப்பு :

இந்நிலையில் திடீரென நடிகை சமந்தா தன்னுடைய சோசியல் மீடியாவில் தனக்கு ஏற்பட்டுள்ள நோய் குறித்து பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் அவர், எனக்கு Myositis என்னும் Autoimmune நோய் பாதிக்கப்பட்டு நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதிலிருந்து குணமடைய எனக்கு கொஞ்சம் காலம் தேவைப்படுகிறது. ஆனால், கூடிய விரைவில் நான் குணமடைந்து நலமுடன் திரும்புவேன் என்று யசோதா படத்திற்கு ட்ரிப்ஸ் ஏற்றி கொண்டே டப்பிங் செய்யும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்

சமந்தாவின் பேட்டி :

இப்படி ஒரு நிலையில் விவாகரத்துக்கு பின்னர் முதன் முறையாக பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள சமந்தா தனது உடல் நலம் குறித்தும் விரைவில் வெளியாக இருக்கும் தனது யசோதா படம் குறித்து பேசி இருக்கிறார். அந்த பேட்டியில் தொகுப்பாளினி ரம்யா, சமந்தாவின் காலில் ஏற்பட்டு இருக்கும் பிரச்சனை குறித்து கேட்ட போது நான் எனது பதிவில் (இன்ஸ்டாகிராம்) கூறியது போல், சில நாட்கள் நல்லதாக இருக்கும், சில நாட்கள் கெட்டதாக இருக்கும். சில நாட்களில், ஒரு அடி எடுத்து வைப்பது கூட கடினமாக இருப்பதாக உணர்ந்தேன்.

https://www.youtube.com/watch?v=rBgIVa7LEzI

கண்ணீர் விட்ட சமந்தா :

ஆனால், நான் இப்போது திரும்பிப் பார்க்கும்போது, இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறேன் என ஆச்சரியப்படுகிறேன். நான் இங்கே போராட வந்திருக்கிறேன். நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனது நிலைமை உயிருக்கு ஆபத்தானது நான் செத்துவிடுவேன் என்று விளக்கும் பல கட்டுரைகளை நான் பார்த்தேன். இப்போது என்னுடைய நிலை உயிருக்கு ஆபத்தானது அல்ல. நான் இன்னும் இறக்கவில்லை. அந்த தலைப்புச் செய்திகள் மிகவும் அவசியமானவை என்று தோன்றவில்லை' என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full