நாக சைதன்யா, சோபிதாவை வம்புக்கு இழுக்கும் சமந்தா? நடந்தது இது தான்

நாக சைதன்யா, சோபிதாவை வம்புக்கு இழுக்கும் சமந்தா? நடந்தது இது தான்

By subhashini · 26/6/2026

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. மாடலிங்கில் 500 ரூபாய் சம்பளத்தில் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய சமந்தா தற்போது பல கோடிகளில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது சமந்தா அவர்கள் மா இன்டி பங்காரம் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை இவரே தயாரிக்கிறார். இந்த படத்தை நந்தினி ரெட்டி இயக்குகிறார். நேற்று வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்து வருகிறது. மேலும், இந்த படத்தின் வெற்றியை சமந்தா திரையரங்கிற்கு வெளியே கொண்டாடி இருந்தார்.

சமந்தா படம்:

படத்தை பார்த்துவிட்டு பட குழுவினருடன் சேர்ந்து சமந்தா கேக் கொண்டிருந்தார். அந்த கொண்டாட்டத்தில் சமந்தா பார்ப்பதற்கு கர்ப்பமாக இருப்பது போலவே தெரிந்தது. இதை சமந்தாவே உறுதி செய்து இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் நடிகை சமந்தா அவர்களுடைய மா இண்டி பங்காரம் படத்தினுடைய சக்சஸ் மீட் நடைபெற்றது. அதில் நாக சைதன்யா- சோபிதாவை வம்பு இழுக்கும் வகையில் சமந்தா பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. அதாவது விழாவில் சமந்தா, கேரியர் மற்றும் ரிலேஷன்ஷிப் என்பது நம்முடைய கையில் தான் இருக்கிறது.

சமந்தா பேசிய விஷயம்:

சில நேரங்களில் உறவுகள் நம் கையில் இருக்காது. அது ரொம்பவே சிக்கலானது. உறவு என்பது சரியாக இருக்க இரண்டு நபர்களும் ஒத்துழைக்க வேண்டும். ஒரு பெண்ணாக நான் என்ன புரிந்து கொண்டேன் என்றால், உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். ஒரு நபராக நீங்களே முழுமை அடைய வேண்டும். ஒரு கட்டத்தில் சரியான நபரை கண்டுபிடிப்பீர்கள். ஆனால், வேறொரு நபர்தான் உங்களை முழுமையாக முடியும் என்றால் அது சரியாக இருக்காது.

சோபிதா சொன்னது:

அது எதிர்பார்ப்பை ரொம்பவே அதிகப்படுத்தும். அது வாழ்க்கைக்கு சரியில்லை என்று கூறியிருந்தார். இதற்கு முன்பே தன் திருமணத்தின் போது சோபிதா, நாக சைதன்யா என்னை முழுமையாக்குகிறார். நான் அவரை நம்புகிறேன். அவர் இல்லாமல் நான் முழுமை அடைய மாட்டேன் என்றெல்லாம் பேசி இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் சமந்தா தற்போது பேசி இருப்பதாக சோசியல் மீடியாவில் ரசிகர்கள் ஒப்பிட்டு வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full