கணவருடன் மீண்டும் இணைகிறாரா சமந்தா ? ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிவிட்ட சமந்தாவின் லேட்டஸ்ட் செயல்.

By Ajju · 21/1/2022

நடிகை சமந்தாவின் சமீபத்திய செயல் அவரது ரசிகர்களை பெரும் குழப்பத்தை ஆழ்த்தியிருக்கிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் சமந்தா. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழிகளில் உள்ள பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் நடிகை சமந்தா அவர்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து இருந்தார்.

கணவரை பிரிந்த சமந்தா :

பின் சமந்தாவுக்கும், நாகா சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாகவும், இருவரும் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் என பல சர்ச்சைகள் எழுந்த வந்த நிலையில் இருவரும் பிரிவதாக தங்கள் சமூக வலைதளத்தில் அறிவித்து இருந்தனர். இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் சமந்தா அவர்கள் அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்தார்.

விவாகரத்துக்கு பின் சமந்தா :

பின் இவர் தன்னுடைய தோழியுடன் சேர்ந்து ஆன்மீக சுற்றுலா சென்று இருந்தார். தற்போது நடிகை சமந்தா அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். மேலும், நடிகை சமந்தா தன்னுடைய திரை வாழ்க்கையில் முதன் முறையாக புஷ்பா படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருந்தார். விவாகரத்துக்கு பின்னர் அடிக்கடி விவாகரத்து பற்றியும் திருமண வாழ்க்கை பற்றியும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் சமந்தா.

சமீபத்தில் சமந்தா அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருந்தார். அதில் அவர் கூறியது, உங்கள் வீட்டில் யாராவது மன அழுத்தத்தில் இருந்தால் அவர்களோடு உரையாடுங்கள். அப்போது தான் அவர்கள் அதிலிருந்து விடுபட்டு இயல்பாக வாழ முடியும். எனக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் மன நிலையில் இருந்து என்னை மீட்டுக் கொண்டு வந்தது என்னுடைய நண்பர்கள் தான். அவர்கள் துணையில் தான் நான் அதிலிருந்து விடுபட்டேன். அதோடு நான் அடுத்த கட்ட வெற்றியை அடைய இருக்கிறதுக்கும் அவர்கள் தான் காரணம் என்று பேசி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் நடிகை சமந்தா தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்திருந்த அந்த பதிவை நீக்கி இருக்கிறார் சமந்தா. இதனை அடுத்து அவர் மீண்டும் நாக சைதன்யாவுடன் இணைவாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் சமந்தாவை பிரிவதாக நாக சைதன்யா அறிவித்த அறிவிப்பு இன்னும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளது.

இருப்பினும் சமந்தா அந்த பதிவை நீக்கி இருப்பதை கண்டு ரசிகர்கள் பலரும் சமந்தா மீண்டும் தன் கணவருடன் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் அவ்வாறு இணைந்தால் தங்களுக்கு சந்தோஷம் என்றும் கூறி வருகின்றனர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நாக சைத்தான்யா ' பிரிந்திருப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எங்கள் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு அது. சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால், நானும் மகிழ்ச்சியாக இருப்பேன். எனவே இது போன்ற ஒரு சூழலில் விவாகரத்துதான் சிறந்த முடிவு தான்' என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full