திருமண உடையை தொடர்ந்து நிச்சயதார்த்த மோதிரத்தை மாற்றிய நடிகை சமந்தா - என்ன செய்து இருக்கார் பாருங்க

By subhashini · 13/3/2025

தன்னுடைய திருமண மோதிரத்தை சமந்தா மாற்றியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க, கடந்த இரண்டு வருடமாகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்தார். இது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இதனால் இவர் சுமார் ஒரு வருடம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். கடந்த ஆண்டு தான் சமந்தா மீண்டும் நடிக்க வந்தார். தற்போது இவர் எல்லா மொழி படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் பாலிவுட் வெப் தொடரில் நடித்திருந்தார்.

சமந்தா திரைப்பயணம்:

பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் சேர்ந்து Citadel : Honey Bunny என்ற வெப் தொடரில் சமந்தா நடித்திருந்தார். இதில் ஆக்ஷன் காட்சிகளில் சமந்தா நடித்திருந்தார். இதில் வெப் சீரியஸை ராஜ் & டிகே இயக்கத்தில் உருவாகி இருந்தது. இவர் ஏற்கனவே சமந்தாவை வைத்து பேமிலி மேன் 2 என்ற வெப் சீரிஸை எடுத்திருந்தார். இந்தத் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதை தொடர்ந்து சமந்தா படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

சமந்தா திருமணம்:

இதற்கிடையில் சமந்தா அவர்கள் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா - நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். பின் கடந்த ஆண்டு நாக சைதன்யா இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர் நடிகை சோபிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தா மோதிரம்:

விவாகரத்திற்கு பின் சமந்தா தன் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, கடந்த சில மாதங்களாகவே சமந்தா பிரபல இயக்குனர் ராஜ் நிடிமோருவுடன் டேட்டிங் செய்வதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து இருவருமே வெளிப்படையாக கூறவில்லை. இருவரும் சேர்ந்து எடுத்த போட்டோக்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் சமந்தா தன்னுடைய திருமணத்தின் போது அணிந்த மோதிரம் குறித்த தகவல் தான் தற்போது வைரலாகி வருகிறது.

சமந்தா புடவை:

அதாவது, சமந்தா தன்னுடைய நிச்சயதார்த்த மோதிரத்தை ஒரு பெடண்டாக மாற்றி அதை ஒரு நெக்லஸ் ஆக உருவாக்கியிருக்கிறார். இதை தான் சமந்தா பல நிகழ்ச்சிகளில் பயன்படுத்தி இருக்கிறார். அதோடு அடிக்கடி இந்த பெடண்டை சமந்தா போடுகிறார் என்றும் கூறப்படுகிறது. இதனுடைய விலை 48 லட்சம். ஏற்கனவே கடந்த ஆண்டு நடந்த விருது விழாவில் சமந்தா, தன்னுடைய திருமண கவுனை மாற்றி வடிவமைத்து பயன்படுத்தியிருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full