ப்பா, சமந்தாவா இது ? – இணையத்தில் கசிந்த 'ஊ சொல்றியா மாமா' முழு வீடியோ பாடல்.

By Rajkumar · 17/12/2021

புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய ஐட்டம் பாடலின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தென்னிந்திய திரை உலகில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீப காலமாக இவரும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனிடையே நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்திருந்தார். பின் இவர்கள் இருவரும் பரஸ்பரமாக பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார்கள்.

விவாகரத்துக்கு பின் சமந்தா :

இது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும், பிரிவிற்கு பிறகு இருவரும் தங்களுடைய வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். தற்போது சமந்தா நிறைய படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டு வருகிறார். அந்த வகையில் இவர் தமிழில் காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சமந்தா, விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

முதல் ஐட்டம் பாடல் :

இப்படி ஒரு நிலையில் நடிகை சமந்தா தன்னுடைய திரை வாழ்க்கையில் முதன் முறையாக புஷ்பா படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். பகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் இன்று வெளியாகி இருக்கிறது.

https://player.vimeo.com/video/657687425?h=0a663c1a24

மேலும், இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் இடம்பெற்ற 'வாயா சாமி ' பாடலை விட சமந்தா ஆடிய 'ஹ்ம் சொல்றியா' பாடல் தான் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த ஒரு பாடலில் ஆட நடிகை சமந்தாவிற்கு 1.30 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

சர்ச்சையை ஏற்படுத்திய 'ஊ சொல்றியா மாமா' :

எந்த அளவிற்கு இந்த பாடல் வரவேற்பை பெற்றதோ அதே அளவு இந்த பாடல் சர்ச்சியிலும் சிக்கி இருக்கிறது. ஆந்திராவை சேர்ந்த ஆண்களுக்கான அமைப்பு ஒன்று புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய அந்த பாடலை தடை செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார்கள். பின் அவர்கள் அளித்த மனுவில் அந்த பாடலில் ஆண்கள் தவறான எண்ணம் கொண்டவர்கள் என்று கூறப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

இணையத்தில் கசிந்த பாடல் :

மேலும், இந்த பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர். ஆனால், இந்த பாடல் படத்தில் இருந்து நீக்கப்படவில்லை. சமந்தா ஆடிய பாடலின் லிரிசிக்கல் வீடியோ யூடுயூபில் பல லட்ச பார்வையாளர்களை கடந்துள்ள நிலையில் இந்த பாடலின் வீடியோ தற்போது இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. அதில் சமந்தா இதுவரை இல்லாத அளவு படு கவர்ச்சியான ஸ்டெப்புகளை போட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full