சமந்தாவுக்கு போட்டியாக குட் நியூஸ் சொன்ன நாக சைதன்யா - சோபிதா - என்ன தெரியுமா?

By subhashini · 4/12/2025

கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் சமந்தாவின் இரண்டாவது திருமணம் குறித்து செய்துதான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க, சமந்தா அவர்கள் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து இருந்தார். பின் திருமணம் ஆகி நான்கு ஆண்டுகளில் இருவரும் பிரிந்து விட்டார்கள். விவாகரத்திற்கு பின் சமந்தா தன் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும், சில மாதங்களாக சமந்தா இயக்குனர் ராஜ் நிடிமோருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பலரும் இருவரும் காதலிப்பதாக சொல்லி வந்தார்கள். ஆனால், இதற்கு இருவருமே மறுப்பு தெரிவிக்கவில்லை. ஒத்துக்கொள்ளவும் இல்லை.

சமந்தா-ராஜ் திருமணம்:

இதனால இவர்கள் இருவருடைய உறவு பற்றி சோசியல் மீடியாவில் காட்டு தீயை போல ஏதாவது ஒரு செய்தி வந்து கொண்டிருக்கிறது. மேலும், சமந்தாவுக்கும் ராஜ் நிடிமோருவுக்கும் கோவையில் உள்ள ஈசா யோகா மையத்தில் தான் திருமணம் நடந்தது. இது இவர்கள் இருவருக்கும் இரண்டாவது திருமணம். இவர்களுடைய திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்தார்கள். இதை பார்த்து பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

நாக சைதன்யா- சோபிதா திருமணம்:

இப்படி இருக்கும் நிலையில் நாக சைதன்யா- சோபிதா சொல்லியிருக்கும் குட் நியூஸ் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, விவாகரத்திற்கு பிறகு நாக சைதன்யா அவர்கள் நடிகை சோபிதாவை காதலித்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர்களின் நிச்சயதார்த்தம் எளிமையாக நாக சைதன்யாவின் வீட்டில் நடந்தது. அதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாகர்ஜுனா குடும்பத்துக்கு சொந்தமாக ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நாக சைதன்யா- சோபிதா திருமணம் நடைபெற்றது.

சோபிதா சொன்ன குட் நியூஸ்:

இவர்களில் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மட்டுமே கலந்து இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவர்களுக்கு திருமணம் ஆகி ஓர் ஆண்டுகள் நிறைவடைந்தது அடுத்து சோபிதா அவர்கள் சிறப்பு பதிவு ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். திருமணத்தின் போது எடுத்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்து பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்

behindtalkies AMP · Quick view
View full