சமீபகாலமாகவே சோசியல் மீடியாவில் சமந்தா, நாக சைதன்யா குறித்த விவாகரத்து செய்திகள் தான் பயங்கரமாக பரவி வந்து கொண்டிருக்கின்றது. கோலிவுட், டோலிவுட் என இரண்டு சினிமா உலகிலுமே இவர்களைப் பற்றிய செய்திகள் தான் அதிகம் இடம்பெறுகின்றன என்று சொல்லலாம். தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் சமந்தாவும், நாக சைதன்யாவும் ஒருவர். ஆவார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா அவர்கள் தன்னுடைய சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும், சமீப காலமாகவே சமந்தாவும், நாக சைதன்யாவும் பிரிக்கிறார்கள். கூடிய விரைவில் இவர்கள் விவாகரத்து பெறுகிறார்கள் என்ற பல சர்ச்சைகளும், வதந்திகளும் சோசியல் மீடியாவில் வந்த வண்ணம் உள்ளன. அதற்கேற்றவாறு அவர்களுடைய சூழ்நிலையும் அமைகின்றது. இந்நிலையில் இவர்களின் விவாகரத்து விவகாரம் குறித்து தற்போது ஒரு புதிய தகவல் கிடைத்து உள்ளது. தற்போது நாகசைதன்யா, சாய்பல்லவி நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் லவ் ஸ்டோரி.

இதையும் பாருங்க : வேற லெவல் Transformation – பொன்னியின் செல்வன் படத்திற்காக படு ஸ்லிம்மாக மாறியுள்ள பிரபு.

Advertisement

இந்த படத்தின் நிகழ்ச்சிக்காக நடிகர் ஆமீர் கான் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார். பிறகு ஹைதராபாத்தில் நாகர்ஜுனா குடும்பத்தினர் நடிகர் ஆமீர் கானுக்கு விருந்து அளித்தனர். அந்த விருந்தில் நாகர்ஜுனா, அவரது மனைவி அமலா, மகன்கள் நாக சைதன்யா, அகில் மற்றும் லவ் ஸ்டோரி பட இயக்குனர் சேகர் கம்முலா, படத்தின் கதாநாயகி சாய்பல்லவி என பலரும் கலந்து கொண்டிருந்தனர். ஆனால், அந்த விருந்தில் நடிகை சமந்தா கலந்து கொள்ளவில்லை.

தற்போது அதற்கான புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. எரியும் விளக்கில் எண்ணெய் ஊற்றுவது போல் ஊடகங்களுக்கு இந்த புது தகவல் கிடைத்து உள்ளது. இது குறித்து சமந்தாவின் பதிலுக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டு இருக்கின்றனர். மேலும், ஆமிர் கான் தற்போது நடித்து வரும் லால் சிங் சட்டா என்ற படத்தில் நாக சைதன்யா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement