இயக்குநருடன் டின்னர் டேட்டிங் சென்ற சமந்தா, அப்போ இரண்டாம் திருமணம் உறுதியா? அதிருப்தியில் ரசிகர்கள்
தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, கடந்த இரண்டு வருடமாகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்தார்.
இது நாம் அனைவரும் பட்டு ஒன்று தான். இதனால் இவர் சுமார் ஒரு வருடம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். கடந்த ஆண்டு தான் இவர் மீண்டும் நடிக்க வந்தார். தற்போது இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சமந்தா பாலிவுட் வெப் தொடரில் நடித்திருந்தார்.
பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் சேர்ந்து Citadel : Honey Bunny என்ற வெப் தொடரில் சமந்தா நடித்திருந்தார். இந்த வெப் சீரிஸ் ராஜ் & டிகே இயக்கத்தில் உருவாகி இருந்தது.
சமந்தா திரைப்பயணம்:
இவர் ஏற்கனவே சமந்தாவை வைத்து பேமிலி மேன் 2 என்ற வெப் தொடரை எடுத்திருந்தார். இந்தத் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது சமந்தா அவர்கள் தயாரிப்பாளராக உருவெடுத்து இருக்கிறார். சமீபத்தில் பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கத்தில் சமந்தா தயாரிப்பில் பிரவீன் படம் வெளியாகி இருந்தது. இதை அடுத்து சமந்தா அவர்கள் பங்காரம் என்ற படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அந்த படத்தில் கதாநாயகியாக சமந்தாவே நடிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.
சமந்தா கல்யாணம்:
அது மட்டும் இல்லாமல் போவதாகவும் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகும் Rakt Bramhand – The Bloody Kingdom என்ற வெப் தொடரில் சமந்தா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி அடுத்தடுத்து தொடர்ந்து சமந்தா படங்களில் கமிட் ஆகி பிஸியாக இருக்கிறார். இதற்கிடையில் சமந்தா அவர்கள் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து இருந்தார். இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள்.
சமந்தா காதல் கிசுகிசு:
விவாகரத்திற்கு பின் சமந்தா தன் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும், சில மாதங்களாக சமந்தா இயக்குனர் ராஜ் நிடிமோருடன் கை கோர்த்தபடி செல்வது, ராஜ் ஒன்றாக அமர்ந்து இருப்பது என்று இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பலரும் இருவரும் காதலிப்பதாக சொல்லி வந்தார்கள். ஆனால், இதற்கு சமந்தா தரப்பிலிருந்து எந்த ஒரு விளக்கமும் தகவலும் வெளியாகவில்லை.
டின்னர் அவுட்டிங்:
இந்நிலையில் நடிகை சமந்தா அவர்கள் சில தினங்களுக்கு முன்பு மும்பையில் உள்ள ஆடம்பர ஓட்டல் ஒன்றில் டின்னர் டேட்டிங் சென்று இருக்கிறார். டின்னர் முடிந்த பிறகு இருவருமே ஒன்றாக ஒரே காலில் வந்திருக்கிறார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து பலருமே சமந்தா, ராஜ் இருவருமே காதலிப்பதோடு சீக்கிரத்திலேயே திருமணம் செய்ய போகிறார்கள் என்றெல்லாம் பேசப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், இது தொடர்பாக சமந்தா எந்த ஒரு பதிலுமே கொடுக்காமல் அமைதியாக இருக்கிறார்.