நாக சைதன்யா நிச்சயதார்த்தம் முடிந்த உடன் சமந்தா போட்ட போஸ்ட் - அந்த விரலை கவனித்தீர்களா ?

By subhashini · 16/8/2024

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பழமொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே நடிகை சமந்தா அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து இருந்தார்.

திருமணத்திற்கு பின்னரும் சமந்தா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமந்தா- நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2011 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். மேலும், இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

சமந்தா- நாக சைதன்யா பிரிவு:

அதோடு இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல கருத்துக்கள் எழுந்த வண்ணம் இருந்தது. ஆனால், இதுவரை இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை? ஏன் பிரிந்தார்கள்? என்று எந்த விவரமும் தெரியவில்லை. இந்நிலையில் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா, சோபிதா உடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக சோசியல் மீடியாவில் வதந்திகள் பரவி இருந்தது. அதற்கு ஏற்றார் போல் சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் மிக எளிமையாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

நாக சைதன்யா- சோபிதா நிச்சயதார்த்தம்:

அதனைத் தொடர்ந்து நடிகை சமந்தாவிற்கு ஆறுதலாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். நாக சைதன்யா, வைரத்தை (சமந்தா) தொலைத்து, தங்கத்தை (சோபிதா) தேடுகிறார் என நாக சைதன்யாவுக்கு எதிராகவும் ரசிகர்கள் பதிவிட்டு இருக்கிறார்கள். அந்த வகையில் ரசிகர் ஒருவர், நீங்கள் எதற்கும் வருத்தப்பட வேண்டாம். உங்களுக்காக நான் இருக்கிறேன் நீங்களும் நானும் கண்டிப்பாக ஒரு சிறந்த ஜோடியாக இருப்போம்.

ரசிகர் சொன்னது:

நீங்க ஓகே சொன்னா நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம். எனக்கு ஒரு இரண்டு வருடங்கள் மட்டும் டைம் கொடுங்க. அதுக்குள் நான் சுயமாக சம்பாதித்து சொந்த காலில் நின்றபின் மீண்டும் உங்களை வந்து சந்திக்கிறேன் என்று சமந்தாவிற்கு லவ் ப்ரோபசல் செய்து இருந்தார். அதற்கு சமந்தாவும் சம்மதம் சொல்வது போல் பதில் அளித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது நடிகை சமந்தா போஸ்ட் ஒன்று போட்டு இருக்கிறார்.

View this post on Instagram

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

சமந்தா பதிவு:

அதில் அவர், தன்னுடைய நடுவிரலை காட்டி இருப்பது போல் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, now we are free என்ற பாடலையும் இணைத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அந்த போட்டோவில் அவர் அணிந்து இருந்த டீசர்டில், the museum of peace quiet என்றும் இருந்தது. தற்போது இந்தப் பதிவை பார்த்த நெட்டிசன்கள், நாக சைதன்யாவுக்கு பதிலடியாக தான் இவர் இப்படி போட்டிருக்கிறார் என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full