தனது படத்தின் இசை நிகழ்ச்சியில் மேடையில் பாடப்பட்ட முன்னாள் கணவர் படத்தின் பாடல் - சமந்தாவின் Reaction வைரல்.

By Arun · 18/8/2023

முன்னாள் கணவருடன் நடித்த படத்தின் பாடலை கேட்டு சமந்தா அழுகையை கட்டுப்படுத்தி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார். அந்த வகையில் இவர் கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா படத்தில் “ஊ சொல்றியா” என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார்.

பின் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து இருந்தார். மேலும், தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சமந்தாவிற்கு இடையில் Myositis என்னும் Autoimmune என்ற இடையில் தாக்கி சிகிக்சை பெற்று இருந்தார். இதற்காக இவர் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இருந்தாலும், இவர் படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமந்தா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி இருந்த படம் யசோதா. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

சமந்தா திரைப்பயணம்:

இதனை அடுத்து கடைசியாக சமந்தா நடிப்பில் வெளியாகி இருந்த சாகுந்தலம் படம் மாபெரும் தோல்வியை தழுவியது. இதை அடுத்து இவர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் நடிப்பில் உருவாகி இருக்கும் குஷி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். மேலும், இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறார்கள். தற்போது குஷி படத்தின் இசை வெளியீட்டு நடைபெற்று இருக்கிறது.

சமந்தா வீடியோ:

இதில் குஷி படக்குழு கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் குஷி படத்தின் விழாவில் சமந்தா, மீண்டும் நான் ஆரோக்கியத்துடன் உங்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் பிளாக் பஸ்டர் படங்களை கொடுப்பேன். இந்த படமும் உங்களுக்கு பிளாக்பஸ்டர் ஆக இருக்கும். நல்ல ஆரோக்கியத்துடன் திரும்பி வருவேன் என்றெல்லாம் பேசி இருந்தார். அதன் பின் சமந்தா-நாக சைதன்யா இணைந்து நடித்திருந்த மஜ்லி படத்தின் பாடல்கள் எல்லாம் பாடி இருந்தார்கள்.

நாக சைதன்யா-சமந்தா திருமணம்:

இதைக் கேட்டவுடன் சமந்தா அழுகை வந்தும் கட்டுப்படுத்த முடியாமல் அமைதியாக உட்கார்ந்து இருக்கிறார். தற்போது இந்த வீடியோவை தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஏண்டா சமந்தாவை இப்படி கஷ்டப்படுத்துகிறீர்கள். எதற்கு இப்படி எல்லாம் செய்கிறீர்கள் என்று அவருக்கு ஆறுதலாக கமெண்ட் போட்டு வருகிறார்கள். நடிகர் நாக சைதன்யா-சமந்தா இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் ஆண்டு கொண்டார்கள்.

நாக சைதன்யா-சமந்தா நடித்த படம்:

பின் இருவரும் தென்னிந்திய சினிமா உலகில் மிக சிறந்த ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இவர்கள் இருவரும் சேர்ந்து மூன்று படங்களில் நடித்திருக்கிறார்கள். அதில் ஒன்று தான் மஜ்லி. கடைசியாக இருவரும் இணைந்து நடித்த படம் இது தான். இந்த படம் 2019 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full