'கணவரிடம் இருந்து இத்தனை கோடியை சுற்றிக்கொண்டு வந்த second hand ஐட்டம்' - அசிங்கமாக பேசியவருக்கு சமந்தா கொடுத்த பதில்.

By Arun · 22/12/2021

தென்னிந்திய திரை உலகில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீப காலமாக இவரும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனிடையே நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்திருந்தார். பின் இவர்கள் இருவரும் பரஸ்பரமாக பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார்கள். இது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இப்படி ஒரு நிலையில் நடிகை சமந்தா தன்னுடைய திரை வாழ்க்கையில் முதன் முறையாக புஷ்பா படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். பகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியானது.

சமந்தாவின் முதல் ஐட்டம் பாடல் :

மேலும், இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் இடம்பெற்ற 'வாயா சாமி ' பாடலை விட சமந்தா ஆடிய 'ஹ்ம் சொல்றியா' பாடல் தான் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த ஒரு பாடலில் ஆட நடிகை சமந்தாவிற்கு 1.30 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும், திரையரங்கில் இந்த பாடலை ரசிகர்கள் ஒன்ஸ் மோர் கேட்டு வருகின்றனர்.

பாடல் ஏற்படுத்திய சர்ச்சை :

ஆனால், இந்த பாடலின் ஆண்களை தவறான எண்ணம் கொண்டவர்கள் போல கூறப்பட்டு இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பியது. மேலும், ஆந்திராவை சேர்ந்த ஆண்களுக்கான அமைப்பு இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என்று புகார் அளித்து இருந்தது. மேலும், இந்த பாடலுக்கு எதிராக ஆந்திரா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதே போல தமிழகத்திலும் இந்த பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.

சமந்தா கொடுத்த பதிலடி :

இப்படி ஒரு நிலையில் இந்த பாடலின் Male Version பாடல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த பாடல் தற்போது சமூக வளைத்ததில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் இந்த பாடலுக்கு கீழ் சமந்தாவை மோசமாக விமர்சித்த நபர் ஒருவர் 'சமந்தா, ஒரு ஜென்டில் மேனிடம் இருந்து 50 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்து வந்த விவாகரத்து ஆன ஒரு கெட்டுப்போன Second Hand ஐட்டம்' என்று பதிவிட்டு இருந்தார். இதற்க்கு கூலாக பதில் அளித்த சமந்தா அவரின் பெயரை சொல்லி உங்கள் ஆத்மாவை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்' என்று பதிவிட்டுள்ளார்.

ஐட்டம் பாடல் குறித்து சமந்தா :

கடந்த சில நாட்களுக்கு முன் இந்த பாடலில் ஆடியது குறித்து தன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சமந்தா 'நான் நல்லவளாக நடித்திருக்கிறேன், கெட்டவளாக நடித்திருக்கிறேன், ஜாலியாகவும் நடித்திருக்கிறேன், சீரியஸாகவும் நடித்திருக்கிறேன், நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாகவும் இருந்திருக்கிறேன். நான் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் என்னுடைய கடின உழைப்பை போட்டிருக்கிறேன். ஆனால், செக்ஸியாக இருப்பது அடுத்தகட்ட கடினமான உழைப்பு, ப்பா, உங்கள் அன்பிற்கு நன்றி' என்று பதிவிட்டு இருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full