எனக்கு பொறாமையா? - நாக சைதன்யா சோபிதா திருமணம் குறித்த கேள்விக்கு சமந்தாவின் ரியாக்ஷன்
முதல் முறையாக நாக சைதன்யா சோபிதா திருமணம் குறித்த கேள்விக்கு சமந்தா ரியாக்ட் செய்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல படங்கள் பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, கடந்த இரண்டு வருடமாகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்தார்.
இது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இதனால் இவர் சுமார் ஒரு வருடம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். சமீபத்தில் தான் இவர் குணமடைந்து மீண்டும் நடிக்க வந்தார். தற்போது இவர் எல்லா மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையே நடிகை சமந்தா அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காலித்து திருமணம் செய்து கொண்டார்.
சமந்தா-நாக சைதன்யா:
இவர்கள் இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா-நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். விவாகரத்திற்கு பின் சமந்தா தன் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது நாக சைதன்யாவுக்கு இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர் நடிகை சோபிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமந்தா நேர்காணல்:
இந்நிலையில் சமீபத்திய நேர்காணலில், எந்தப் பெயரையும் குறிப்பிடாமல் அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யா - சோபிதா திருமணம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. மேலும் அந்த திருமணம் பற்றி கசப்பாக உணர்கிறீர்களா எனவும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சமந்தா ஜெகன் நிதானமாக பதில் அளித்துள்ளார். அதில், முழுமையான பெண்ணாக இருக்க, திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இங்கே உள்ளது'.
மகிழ்ச்சியாக வாழமுடியும்:
எனவே, ஒருவர் அப்படி இல்லை என்றால், தானாகவே அவர் சோகமாகவும் தனிமையாகவும் இருக்கிறார் என்று கருதுவது மிகவும் தவறு. அதில் உண்மை இல்லை என்ன சமந்தா கூறியுள்ளார். ஒரு பெண் தானாகவே மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் வாழ முடியும் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார். இந்த நேர்காணலில் பெயர்கள் எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும், மறைமுகமாக தனது முன்னால் கணவர் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு சமந்தா சாமர்த்தியாக பதில் அளித்துள்ளார்.
எனக்கு பொறாமையா:
மேலும், என் வாழ்க்கையில் நான் நிறைய விஷயங்களைச் சந்தித்து இருக்கிறேன். அனைத்தையும் பற்றிய இப்போது சிந்திக்க முடியாது. நான் முற்றிலும் தவிர்க்க விரும்பும் ஒரு குணம் பொறாமை. அதை என்னிடம் இருக்க நான் அனுமதிக்கவே மாட்டேன். பொறாமை தான் எல்லா தீமைகளுக்கும் வேர் என்று நினைக்கிறேன். பொறாமை போன்ற ஆரோக்கியமற்ற எதற்கும் நான் இடம் கொடுப்பதே இல்லை என்று சமந்தா கூறியிருக்கிறார்.