தவறுகள் மூலம் தான் நான் கற்றுக்கொண்டேன் -'விண்ணைத்தாண்டி வருவாயா' பட அனுபவத்தை பகிர்ந்த சமந்தா

By subhashini · 5/3/2025

தமிழ் சினிமா உலகில் காதல், ரொமான்டிக் படம் என்றாலே அது கௌதம் மேனன் தான். இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் படத்திற்கு என்று ஒரு தனி ரசிகர் படை இருக்கிறது. ஏன்னா, அந்த அளவிற்கு இவருடைய படமெல்லாம் மிகப் பெரிய அளவு ஹிட். இவர் முதன் முதலாக விளம்பரப் பட இயக்குனராக தான் இருந்தார். அதற்கு பின் தான் இவர் ராஜீவ் மேனனிடம் உதவியாளராக இருந்தார். அதற்கு பிறகு இவர் மின்னலே படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

அதன்பின் இவர் பல ஹிட் படங்களை இயக்கியிருக்கிறார். மேலும், இவர் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதை அடுத்து கடந்த ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி, இயக்கி எடுத்த ஜோஷ்வா இமை போல் காக்க படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. சமீபத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி இருந்த படம் ‘Dominic and the Ladies Purse’.

கௌதம் மேனன் குறித்த தகவல்:

இந்த படத்தின் மூலம் தான் இவர் மலையாள சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகி இருக்கிறார். தற்போது கௌதம் மேனன் இயக்கியும், நடித்தும் வருகிறார். இந்த நிலையில் விண்ணைத்தாண்டி வருவாயா படம் தொடர்பான செய்தி தான் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை இந்த இருந்தார்.

விண்ணைத்தாண்டி வருவாயா படம்:

இந்த படத்தில் திரிஷா, விடிவி கணேஷ் உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது. அது மட்டும் இல்லாமல் இந்த படம் வெளியாகி 15 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறது. இதனால் படத்தில் தங்களுக்கு பிடித்த காட்சிகள், பாடல்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் ட்ரெண்டிங் ஆக்கி இருந்தார்கள். மேலும், இந்த படத்தினுடைய தெலுங்கு வெர்சனனில் நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் நடித்திருந்தார்கள். தெலுங்கில் யோ மாயா சேசவே என்ற பெயரில் இந்த படம் வெளியாகி இருந்தது.

சமந்தா பேட்டி:

இந்நிலையில் இந்த படம் 15 ஆண்டுகள் நிறைவடைந்தது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் சமந்தா, 15 ஆண்டுகள் என்பது ரொம்ப நீண்ட காலம் தான். இதற்கு முன்பு நான் நடித்த சில படங்களை பார்க்கும்போது இவ்வளவு மோசமாக நடித்திருக்கிறேனா? என்று எனக்கு தோன்றும். ஆனால், தவறுகள்
மூலம் தான் நான் நடிப்பை கற்றுக் கொண்டேன். அதற்கு காரணம், என்னை வழிநடத்த யாருமில்லை. எனக்கு மொழியும் தெரியாது. நான் எல்லாவற்றையும் ஒரு சிறு புள்ளியில் இருந்து தான் கற்றுக் கொண்டேன். எனக்கு திரைத்துறையில் நண்பர்கள் கிடையாது. எல்லாமே எனக்கு புதிது தான்.

கௌதம் மேனன் பற்றி சொன்னது:

எல்லாவற்றையும் நான் அப்படிதான் கற்றுக் கொண்டேன். யோ மாயா சேசவே படத்தை பொருத்தவரை எனக்கு படத்தின் ஒவ்வொரு ஷாட்டுமே நினைவிருக்கிறது. குறிப்பாக, படத்தின் முதல் காட்சியில் ஜெஸ்ஸியும் கார்த்திக்கும் வீட்டு கேட்டு அருகில் சந்திப்பார்கள். அந்த காட்சியின் அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது. அந்த நினைவுகளின் ஒவ்வொரு விஷயத்தையும் என்னால் இப்போதும் துல்லியமாக சொல்ல முடியும். அதற்கு காரணம் கௌதம் மேனன் தான். ஏனென்றால் அவருடன் பணியாற்றியது ரொம்ப சிறப்பாக இருந்தது. அவர், தனக்கு என்ன வேண்டும் என்பதில் அவ்வளவு தெளிவாக இருந்தார் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full