இவ்வளவு ஏன் ஒல்லி ஆயிட்டன்னு கேட்குறாங்க, ஆனால் நான் பட்ட - நடிகை சமந்தா எமோஷனல்

மயோசிடிஸ் நோயால் பட்ட கஷ்டங்கள் பற்றி மனம் திறந்த நடிகை சமந்தா

By subhashini · 19/6/2026

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது சமந்தா அவர்கள் மா இன்டி பங்காரம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை இவரே தயாரிக்கிறார். இந்த படத்தை நந்தினி ரெட்டி இயக்குகிறார். இந்த படம் இன்று திரைக்கு வெளியாகி இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படம் தொடர்பாக அளித்த பேட்டியில் தன்னுடைய வாழ்க்கையில் மயோசிடிஸ் நோயால் தான் பெற்ற பாதிப்புகளை குறித்து மனம் திறந்து சமந்தா பேசியிருக்கிறார்.

சமந்தா பேட்டி:

அதில் அவர், மக்கள் என்னை பார்க்கும் போதெல்லாம் ஏன் இவ்வளவு எடை குறைந்து விட்டீர்கள்? இவ்வளவு கஷ்டப்பட்டு டயட் இருக்கணுமா? என்றெல்லாம் கேட்பார்கள். ஆனால், ஒருவருடைய வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று யாருக்குமே தெரியாது. எனக்கு சாப்பிட பிடிக்கவில்லை என்பது கிடையாது. என்னால் சாப்பிடவே முடியவில்லை. நோய் தீவிரம் அதிகரித்த அந்த நேரத்தில் தான் சாப்பிடும் உணவே என்னுடைய நோயை தூண்டிவிடும். என்னுடைய செரிமான மண்டலத்தில் சிறிய பிரச்சனை ஏற்பட்டால் கூட மயோசிடிஸ் பாதிப்பு அதிகமாகிவிடும். அதனால்தான் நான் ரொம்ப கடுமையாக டயட்டை பின்பற்றி இருந்தேன்.

அனுபவித்த கஷ்டம்:

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக காலை மதியம் இரவு என மூன்று வேலையும் ஒரே மாதிரியான ருசி இல்லாத சப் என்ற உணவை தான் சாப்பிட்டேன். அது ரொம்பவே கஷ்டமான காலம். உணவில் ரொம்பவே கடுமையான கட்டுப்பாடுகள் இருந்த போது மருத்துவர்கள் சர்க்கரை பால் இல்லாத ஜெலாட்டோ என்ற ஐஸ்கிரீமை சாப்பிட அனுமதி தந்தார்கள். பல வருடங்களுக்கு பிறகு நான் சாப்பிட்ட முதல் சுவையான உணவு அதுதான். அந்த தருணத்தின் நினைவாக தான் என்னுடைய பூனைக்கும் அந்த உணவுடைய பெயர் வைத்தேன் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.

மயோசிடிஸ் நோய்:

கடந்த 2022 ஆம் ஆண்டில் இருந்து மயோசிடிஸ் என்ற பாதிப்பால் சமந்தா ரொம்பவே அவஸ்தைப்பட்டு இருந்தது அனைவருமே அறிந்தது. இதற்காக அவர் நிறைய சிகிச்சை மேற்கொண்டு இருந்தார். குறிப்பாக படத்தின் ப்ரோமோஷனில் கூட அந்த லைட் வெளிச்சத்தினால் அவருடைய கண்கள் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருந்தது. சமந்தாவின் உடல்நிலை அன்றிலிருந்து இன்று வரை தைரியமாக இந்த நோய் எதிர்த்து போராடிக் கொண்டுதான் வருகிறார். தற்போது இவர் குணமடைந்து வருவதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட சமந்தா சரியாகி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full