இந்த 2 வருசமாக சுதந்திரமாக இருக்கிறேன், யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை - சமந்தா ஓபன் டாக்

By subhashini · 14/6/2025

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, கடந்த இரண்டு வருடமாகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்தார். இது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

இதனால் இவர் சுமார் ஒரு வருடம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். கடந்த ஆண்டு தான் சமந்தா மீண்டும் நடிக்க வந்தார். தற்போது இவர் மீண்டும் படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சமந்தா பாலிவுட் வெப் தொடரில் நடித்திருந்தார். பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் சேர்ந்து Citadel : Honey Bunny என்ற வெப் தொடரில் சமந்தா நடித்திருந்தார். இதில் ஆக்ஷன் காட்சிகளில் சமந்தா நடித்திருந்தார். இந்த வெப் சீரிஸ் ராஜ் & டிகே இயக்கத்தில் உருவாகி இருந்தது. இவர் ஏற்கனவே சமந்தாவை வைத்து பேமிலி மேன் 2 என்ற வெப் பேமிலி எடுத்திருந்தார்.

சமந்தா திரைப்பயணம்:

இந்தத் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது சமந்தா அவர்கள் தயாரிப்பாளராக உருவெடுத்து இருக்கிறார். பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கத்தில் சமந்தா தயாரிப்பில் சுபம் படம் வெளியாகி இருந்தது. இதை தொடர்ந்து சமந்தா படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில் சமந்தா அவர்கள் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து இருந்தார். இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள்.

சமந்தா சர்ச்சை:

விவாகரத்திற்கு பின் சமந்தா தன் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும், சில மாதங்களாக சமந்தாவின் காதல் கிசுகிசு குறித்த செய்திதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் இயக்குனர் ராஜ் நிடிமோருடன் கை கோர்த்தபடி செல்வது, பேசுவது, ஒன்றாக அமர்ந்து இருப்பது என்று இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பலருமே இருவரும் காதலிப்பதாக சொல்லி வந்தார்கள். ஆனால், இதற்கு சமந்தா தரப்பிலிருந்து எந்த ஒரு விளக்கமும் தகவலும் வெளியாகவில்லை.

சமந்தா பேட்டி:

சமீபத்தில் கூட சமந்தா துபாய் சென்று இருந்தார். அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை எல்லாம் இன்ஸ்டாவில் பகிர்ந்து இருந்திருந்தார். அதை பார்த்து பலரும் இவர் தன்னுடைய காதலர் உடன் தான் சென்றிருக்கிறார் என்றெல்லாம் கிசு கிசுக்கப்பட்டது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் சமந்தா, நான் இப்போது வெற்றியை சுதந்திரத்தின் அடிப்படையில் பார்க்கிறேன். இரண்டு வருடங்கள் இடைவெளி எடுக்கும் சுதந்திரம் எனக்கு கிடைத்தது.

https://www.youtube.com/watch?v=1KBvNGVxuMg

சுதந்திரம் பற்றி சொன்னது:

இரண்டு வருடங்களாக என்னுடைய படம் வெளியாகவில்லை. வளர்ச்சி அடைய சுதந்திரம், முதிர்ச்சி அடைவதும் சுதந்திரம் தான். குறிப்பாக ஒரு கட்டத்தில் மட்டுமே இருக்காமல் இருப்பது தான் சுதந்திரம். இப்போது நான் அதிகமாக வெற்றியை பெற்றுள்ளேன். யார் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி எல்லாம் நான் கவலைப்படாமல் முன்பு இருந்ததை விட இப்போதுதான் அதிக வெற்றி பெற்றவர்களாக பார்க்கிறேன்.
இப்போது நான் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்திருக்கும் போது சந்தோஷமாகவும், உற்சாகமாகவும் இருக்கிறேன். காரணம், நான் செய்யும் பல வேலைகள் எனக்கு ரொம்ப நிம்மதியை கொடுக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full