இவங்க லவ் கன்ஃபாம்மா? ராஜ் நிடிமோருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த சமந்தா - அதிருப்தியில் ரசிகர்கள்
தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, சில வருடத்திற்கு முன் சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்தார். இது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இதனால் இவர் சுமார் ஒரு வருடம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார்.
கடந்த ஆண்டு தான் இவர் மீண்டும் நடிக்க வந்தார். தற்போது இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் நடிகர் வருண் தவானுடன் சேர்ந்து Citadel : Honey Bunny என்ற வெப் தொடரில் சமந்தா நடித்திருந்தார். இந்த வெப் சீரிஸ் ராஜ் & டிகே இயக்கத்தில் உருவாகி இருந்தது. இவர் ஏற்கனவே சமந்தாவை வைத்து பேமிலி மேன் 2 என்ற வெப் தொடரை எடுத்திருந்தார். இந்தத் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பின் பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கத்தில் சமந்தா தயாரிப்பில் சுபம் படம் வெளியாகி இருந்தது.
சமந்தா திரைப்பயணம்:
இதை அடுத்து சமந்தா அவர்கள் பங்காரம் என்ற படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அந்த படத்தில் கதாநாயகியாக சமந்தாவே நடிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகும் வெப் தொடரில் சமந்தா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி அடுத்தடுத்து தொடர்ந்து சமந்தா படங்களில் கமிட் ஆகி பிஸியாக இருக்கிறார். இதற்கிடையில் சமந்தா அவர்கள் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து இருந்தார். இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் பிரிந்து விட்டார்கள்.
சமந்தா காதல் கிசுகிசு:
விவாகரத்திற்கு பின் சமந்தா தன் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும், சில மாதங்களாக சமந்தா இயக்குனர் ராஜ் நிடிமோருடன் கை கோர்வது செல்வது, ராஜ் ஒன்றாக அமர்ந்து இருப்பது என்று இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பலரும் இருவரும் காதலிப்பதாக சொல்லி வந்தார்கள். ஆனால், இதற்கு இருவருமே மறுப்பு தெரிவிக்கவில்லை, ஒத்துக்கொள்ளவும் இல்லை.
இதனால இவர்கள் இருவருடைய உறவு பற்றி சோசியல் மீடியாவில் காட்டு தீயை போல ஏதாவது ஒரு செய்தி வந்து கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் சமந்தா, ராஜ் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமந்தா புகைப்படம்:
அதாவது சமீபத்தில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் ராஜ் உடன் சமந்தா கலந்து கொண்டிருந்தார். அப்போது சமந்தா அவரை கட்டிப்பிடித்தது நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்த சமந்தா, கடந்த ஒன்றை ஆண்டுகளில் என்னுடைய கேரியரில் சில தைரியமான முடிவுகளை எடுத்துள்ளேன். புத்திசாலித்தனமான கடினமான உழைக்கும் நபர்களுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி. இது எனக்கு ஒரு ஆரம்பம் மட்டுமே என்று கூறியிருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் சீக்கிரத்திலே இவர்கள் இருவரும் திருமண தேதியை அறிவிப்பார்கள் என்றெல்லாம் கூறி வருகிறார்கள்.