'100 முறை விழுந்து ஒவ்வொரு முறையும் எழுந்தேன்' - பனிச்சறுக்கு வீடியோவை பகிர்ந்த சுமந்தா (வாழ்க்கை தத்துவம் மாதிரியும் இருக்கே)

By Rajkumar · 28/1/2022

பனிச்சறுக்கில் கீழே விழுந்து விழுந்து விளையாடும் சமந்தாவின் சுவிட்சர்லாந்து சுற்றுலா பயணம் புகைப்படம், வீடியோக்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் சமந்தா. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழிகளில் உள்ள பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் நடிகை சமந்தா அவர்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து இருந்தார்.

திருமணத்திற்கு பிறகும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். பின் இருவரும் சிறந்த ஜோடிகளாக வலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா- நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். கடந்த ஆண்டு முழுவதும் இது குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் சமந்தா அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்தார்.

சமந்தாவின் மன அழுத்த பயணம்:

பின் இவர் தன்னுடைய தோழியுடன் சேர்ந்து ஆன்மீக சுற்றுலா சென்று இருந்தார். இப்படி இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்ததற்கு பிறகு படங்களில் இருவரும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அதிலும் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த புஸ்பா படத்தில் சமந்தா ஆடிய இருந்த ‘ஊ சொல்றியா மாமா’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் படு பேமஸ் ஆனது. இதனை தொடர்ந்து மீண்டும் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆட சமந்தா ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

https://twitter.com/TeamTWTS/status/1486634856935161859

சமந்தா நடிக்கும் படங்கள்:

அதுமட்டும் இல்லாமல் சமந்தா பாலிவுட், ஹாலிவுட் என பல படங்களில் ஒப்பந்தம் ஆகி நடித்து வருகிறார்.
இது ஒரு பக்கமிருக்க, பொதுவாகவே சமந்தா அதிகமாக சுற்றுலா பயணம் செய்வார். அதிலும் விவாகரத்துக்கு பிறகு அதிகம் வெளிநாட்டு பயணங்கள் சென்று கொண்டிருக்கின்றார். இந்நிலையில் சமந்தா சுற்றுலா பயணம் புகைப்படம், வீடியோக்களும் அதன் அனுபவத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். தற்போது நடிகை சமந்தா சுவிட்சர்லாந்து சுற்றுலா பயணத்தில் இருக்கிறார்.

சமந்தாவின் சுவிட்சர்லாந்த் சுற்றுலா பயணம்:

இது சமந்தாவின் மற்ற சுற்றுலா பயணத்தை போல இல்லாமல் ஒரு புதுவிதமான சுற்றுலா பயணம். அது என்னவென்றால், சுற்றுலா பயணத்தில் பனிச்சறுக்கு விளையாட்டில் பயிற்சி வகுப்புகளிலும் சமந்தா கலந்து இருக்கிறார். சுவிட்சர்லாந்தில் நடந்த பனி சறுக்கு வகுப்புகளில் கலந்து கொண்ட சமந்தா தான் பயிற்சி எடுத்துக்கொண்ட காணொளியையும், தனது பனிச்சறுக்கு பயிற்றுவிப்பாளர் கேத்வுடன் இருந்த அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார்.

வைரலாகும் போட்டோ, வீடியோ:

அதில் அவர் கூறியிருப்பது, நான் சிறு குழந்தைகளுடன் என் பனி சறுக்கு பயணத்தை பன்னி ஸ்லோப்பில் தொடங்கினேன். நூறு முறை விழுந்தேன் இருந்தாலும் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது அனுபவத்தை உற்சாகமாகவும் அச்சுறுத்தலாகவும் இருக்கும் வகையில் மாற்றியதற்கு நன்றி. என்னை பயிற்றுவித்ததற்காக அன்பான கேத்க்கு ஒரு பெரிய கூக்குரல் என்று சமந்தா குறிப்பிட்டிருந்தார். இப்படி சமந்தாவின் வீடியோ, புகைப்படம் எல்லாம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full