சமந்தாவை கைது செய்யணும், மருந்து தொடர்பாக அவர் சொன்ன அட்வைஸ்- கொந்தளித்த மருத்துவர்கள்
மருத்துவம் தொடர்பாக சமந்தா போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. தென்னிந்திய சினிமாவில் 12 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் சமந்தா. சமீபத்தில் சமந்தா அவர்கள் மூக்கில் நெபுலைசர் கருவியை வைத்தவாறு புகைப்படத்தை பதிவிட்டு, பொதுவாக வைரல் தொற்றுக்கு மருந்து கொள்ளும் முன் ஒரு மாற்று வழியை முயற்சித்து பாருங்கள்.
Left: Influential Indian actress Ms. Samantha Ruth who is unfortunately a health and science illiterate advising millions of her followers to inhale hydrogen-peroxide to prevent and treat respiratory viral infections.
— TheLiverDoc (@theliverdr) July 4, 2024
Right: Scientific society, The Asthma and Allergy Foundation… pic.twitter.com/Ihn2xocKUt
அதில் ஒரு வழி தான் ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் காய்ச்சி வடிகட்டிய நீர் ஆகியவற்றின் கலவை மூலம் நெபுலைஸ் செய்வது என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. இதற்கு பலருமே கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் லிவர் டாக் என்ற மருத்துவர் சமந்தாவின் கருத்தை கண்டித்து பதிவு ஒன்று போட்டிருக்கிறார்.
மருத்துவர் பதிவு:
அதில் அவர், சுவாச வைரஸ் தொற்றுகளை தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் ஹைட்ரஜன் பெராக்சைடு சுவாசிக்க வேண்டும் என்று சமந்தா கூறி இருக்கிறார். ஆனால், அமெரிக்காவின் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி அறக்கட்டளை நிறுவனம் ஹைட்ரஜன் பெராக்சைடு செய்ய வேண்டாம் என்று எச்சரித்து இருக்கிறது. காரணம், அது நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தான ஒன்று.
சமந்தா மீது கண்டனம்:
பகுத்தறிவு மற்றும் விஞ்ஞான ரீதியாக இருக்கும் ஒரு முற்போக்கான காலத்தில் சுகாதாரத்திற்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் சமந்தா கூறியிருக்கிறார். இவருக்கு அபதாரம் அல்லது சிறை தண்டனை கொடுக்க வேண்டும். மருத்துவம் தொடர்பாக அவருக்கு சிறந்த ஆலோசகர் தேவை என்று கூறி இருக்கிறார். இவரின் பதிவிற்கு சிலர் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
சமந்தா திரைப்பயணம்:
மேலும், கடந்த ஆண்டு சமந்தா லீட் ரோலில் நடித்த ‘யசோதா’ மற்றும் ‘சகுந்தலம்’ ஆகிய இரண்டு படங்களும் மாபெரும் தோல்வியை தழுவியது. அதன் பின்னர் இவர் நடிப்பில் வெளிவந்த ‘குஷி’ படம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது. சமந்தாவிற்கு இது ஒரு கம் பேக் படமாக அமைந்து இருந்தது. இதனிடைய கடந்த இரண்டு வருடம் ஆகவே சமந்தா அவர்கள் மயோசைட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்த தகவல் அனைவரும் அறிந்ததே.
சமந்தா படங்கள்:
இதற்காக வெளிநாடுகளில் சிகிச்சை எடுத்தார். நீண்ட ஓய்விற்குப் பிறகு பூரண குணம் அடைந்த சமந்தா மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். தற்போது இவர் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பல மொழி படங்களில் கமிட்டாகி இருக்கிறார். அந்த வகையில் இவர் எச்.வினோத் இயக்கத்தில் விஜயின் 69 வது படத்தில் இணைகிறார் என்ற செய்திகள் வைரலாகி வருகிறது.