நடிகை சமந்தாவிற்கு கோவில் கட்டி கடவுளாக வழிபடும் ரசிகர் - எங்கு தெரியுமா? வைரலாகும் புகைப்படம்

By subhashini · 2/4/2025

நடிகை சமந்தாவிற்கு ரசிகர் ஒருவர் கோயில் கட்டி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளின் படம் வந்தா கட் அவுட் வைப்பது, அதற்கு பாலபிஷேகம் செய்வது என்று தான் பார்த்திருப்போம். அதிலும் சில ரசிகர்கள் ஒரு படி மேலே போய் அலகு குத்திக்கொள்வது, மண் சோறு சாப்பிடுவது, கையில் கற்பூரம் ஏற்றுவது என்று கடவுளுக்கு செய்வதை நடிகர் நடிகைகளுக்கும் செய்யும் வேடிக்கையும் அவ்வப்போது நடந்து தான் வருகிறது.

தமிழ் நாட்டில் முதன் முதலில் குஷ்பூவிற்கு தான் கோவில் கட்டப்பட்டது. அது அப்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து நடிகை நயன்தாராவிற்கு ரசிகர்கள் கோவில் கட்டி சிலை வைத்தனர். இதெற்கெல்லாம் தொடர்ச்சியாக சினிமாவிற்குள் நுழைந்த சில ஆண்டுகளே ஆன நடிகை நிதி அகர்வாலுக்கு கூட ரசிகர் சிலை வைத்து அதனை கடவுளாக வழிபட்டார். இந்த வரிசையில் நடிகை சமந்தாவிற்கும் ரசிகர் ஒருவர் தனது வீட்டிலேயே கோவில் கட்டியுள்ளார்.

சமந்தாவிற்கு சிலை:

ஆந்திர மாநிலம் தெனாலி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தான் தன்னுடைய சொந்த ஊரிலேயே தன் வீட்டின் அருகில் சமந்தாவிற்கு சிலை வடிவமைத்து கோயில் ஒன்றை கடந்த 2023 ஆம் ஆண்டு கட்டியிருந்தார். அதன் பின் சமந்தாவின் பிறந்தநாள் அன்று அந்த சிலையை திறந்து வைத்திருந்தார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் வியந்து பாராட்டி இருந்தார்கள். ஆனால், சிலர் இப்படி எல்லாம் பைத்தியக்காரத்தனமாக செய்வதாக என்றெல்லாம் விமர்சித்தும் இருக்கிறார்கள். தற்போது சமந்தா சிலையின் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமந்தா குறித்த தகவல்:

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, கடந்த இரண்டு வருடமாகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்தார். இது நாம் அனைவரும் பட்டு ஒன்று தான். இதனால் இவர் சுமார் ஒரு வருடம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார்.

சமந்தா திரைப்பயணம்:

கடந்த ஆண்டு தான் சமந்தா மீண்டும் நடிக்க வந்தார். தற்போது இவர் எல்லா மொழி படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் பாலிவுட் வெப் தொடரில் நடித்திருந்தார்.
பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் சேர்ந்து Citadel : Honey Bunny என்ற வெப் தொடரில் சமந்தா நடித்திருந்தார். இதில் ஆக்ஷன் காட்சிகளில் சமந்தா நடித்திருந்தார். இந்தத் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதை தொடர்ந்து சமந்தா படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

சமந்தா திருமணம்:

இதற்கிடையில் சமந்தா அவர்கள் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து இருந்தார். இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா – நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். பின் கடந்த ஆண்டு நாக சைதன்யா, நடிகை சோபிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. விவாகரத்திற்கு பின் சமந்தா தன் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full