தளபதி 67ல் சமந்தா வில்லி என்றால் இவர் தான் விஜய்க்கு ஜோடியா ? அட, இவரா ?

By Ajju · 20/7/2022

தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லியாக நடிக்க இருக்கும் நடிகை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். சமீபத்தில் விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜூ இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது.

வாரிசு படம்:

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். ஏற்கனவே இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

லோகேஷ்-விஜய் கூட்டணி:

இதனை அடுத்து விஜய்யின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்குகிறார் என்று கூறப்பட்டு இருக்கிறது. லோகேஷ் இயக்கத்தில் கமலின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் விக்ரம். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது லோகேஷ் கனகராஜ் விஜயை வைத்து தளபதி 67 படத்தை இயக்க இருக்கிறார். அதற்கான அதிகார பூர்வ அறிவிப்புகள் எல்லாம் வெளியாகி இருந்தது.

விஜய் பட வில்லி:

மேலும், விஜய் படத்தில் நடிகை சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்தது. இந்நிலையில் அவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் வில்லியாக நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. சமந்தாவின் கதாபாத்திரம் வில்லி என்றால் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிப்பது யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தளபதி 67 படத்தில் நாயகியாக பிரியங்கா மோகனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

பிரியங்கா மோகன் குறித்த தகவல்:

பிரியங்காவுக்கு விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைதது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருந்தாலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் பிரியங்கா மோகன். இவர் டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

behindtalkies AMP · Quick view
View full