புஷ்பா படத்தில் செம குத்தாட்டம் போட்டுள்ள சம்மு - வெளியான வீடியோ (இந்த டான்ஸ்ஸுக்கு தான் அத்தனை கோடியா ? )

By Rajkumar · 10/12/2021

அல்லு அர்ஜுன் நடித்து இருக்கும் 'புஷ்பா' படத்தில் சமந்தா ஆடிய ஐட்டம் டான்ஸ் பாடலின் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் தன் கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்து இருந்தார். விவாகரத்து அறிவிப்பிற்கு பின்னர் நடிகை சமந்தா அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். மேலும், முதன் முறையாக பாலிவுட் படத்தில் கூட நடிக்கப்போவதாக கூட கூறப்படுகிறது.

https://www.youtube.com/watch?v=u6BoyOceiPE

இப்படி ஒரு நிலையில் நடிகை சமந்தா, முதன் முறையாக ஐட்டம் பாடல் ஒன்றில் நடனமாட இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. தெலுங்கு சினிமா உலகில் ஸ்டைலிஷ் ஸ்டார் ஆக கலக்கி கொண்டிருப்பவர் அல்லு அர்ஜுன். தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் புஷ்பா. இந்த படத்தை சுகுமார் இயக்கி வருகிறார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது.

இதையும் பாருங்க : குளியல் துண்டில் புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் காலை தூக்கத்தை களைத்த பீஸ்ட் பட நடிகை.

மேலும், இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படம் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாகி வருகிறது. மேலும், இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படம் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாகி வருகிறது. படத்தில் அல்லு அர்ஜுன் அவர்கள் லாரி டிரைவராக நடிக்கிறார்.

இந்த படத்தில் வில்லனாக பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளிவர உள்ளது. இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் நடிகை சமந்தா ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். அதற்கு அவருக்கு 1.5 கோடிகள் சம்பளம் பெற்றதாவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது.

behindtalkies AMP · Quick view
View full