இவங்க வட நாட்டு மீரா மிதுன் இவங்களுக்கு எல்லாம் சப்போர்ட் பண்ணாதீங்க - சமந்தாவின் பதிவால் கடுப்பான ரசிகர்கள்.

By Rajkumar · 3/4/2021

தென்னிந்திய சினிமா உலகில் 11 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா. தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த சமந்தாவுக்கு சில வருடங்களாகவே தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். பின் சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.இப்படி ஒரு நிலையில் இவர் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் ஏ எல் விஜய் இயக்கத்தில் 'தலைவி' படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. இதுகுறித்து பாராட்டி நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் போட்ட பதிவை பார்த்து பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/Ashok_sunny0/status/1374261865128206336

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் 2008-ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் வெளி வந்த தாம் தூம் படம் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். தற்போது ஜெயலலிதாவின் வாழ்கை வரலாறு படம் ஆன தலைவி படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இவரது மணிகர்ணிகா படத்திற்காக தேசிய விருதும் கிடைத்தது. அடிக்கடி சமூக வலைதளத்தில் சர்ச்சையான பதிவுகளை கங்கனா பதிவிடுவது வழக்கம்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கூட இது உருமாற்றத்திற்கான எச்சரிக்கை... இந்த உலகத்தில் இப்போதைக்கு என்னைத் தவிர வேறு யாரும் இந்த அளவிற்கு மாற்றத்தைக் காண்பித்ததில்லை. மெரில் ஸ்ட்ரிப் போல அடுக்கடுக்கான கதாபாத்திரத் திறமை என்னிடம் உள்ளது. அதே போல கேல் கடாட் போல் என்னாலும் ஆக்ஷனாகவும், கிளாமராகவும் நடிக்க முடியும். இந்தப் பிரபஞ்சத்தில் என்னைத் தவிர வேறு யாராவது இந்த அளவிற்கு கலைத் திறமை காட்ட முடியுமா என வெளிப்படையாக சவால் விடுக்கிறேன். அப்போது என்னுடைய ஆணவத்தை நான் கைவிடுகிறேன். அதுவரை அந்தப் பெருமையின் மதிப்பு எனக்குத்தான், என்று சவால் விட்டு இருந்தார்.

அதே போல விவசாயிகள் பிரச்சனை குறித்து கங்கனா சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்தது, கங்கனாவின் அலுவலகம் இடிக்கப்பட்டது என்று இப்படி கங்கனா பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். இந்த நிலையில் தலைவி படத்தை பாராட்டி சமந்தா போட்டுள்ள இந்த பதிவு சமந்தாவின் ரசிகர்களை வெறுக்கச் செய்துள்ளது. மேலும், இவங்க வட நாட்டு மீரா மிதுன் இவங்க கூடலாம் சேராதீங்க என்று சமந்தாவிற்கு பலர் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

behindtalkies AMP · Quick view
View full