மகனுக்கு 4 ஆண்டு, தந்தைக்கு 6 ஆண்டு மட்டுமே நீடித்த முதல் திருமணம் - நாகர்ஜூனாவின் முதல் மனைவி. திருமண புகைப்படம் இதோ.
தன் தந்தையை போலவே கல்யாண உறவில் நாகசைதன்யா முடிவு எடுத்து உள்ளார் என்று சோசியல் மீடியாவில் தற்போது ஒரு புது சர்ச்சை எழுந்து உள்ளது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்துள்ளார். நடிகை சமந்தா அவர்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தென்னிந்திய சினிமா உலகில் மிக சிறந்த ஜோடி என்றால் சமந்தா-நாகசைதன்யா தான் என்று சொல்லும் அளவிற்கு திகழ்ந்து வந்தார்கள்.
பின் சமீப காலமாகவே சமந்தாவுக்கும், நாகா சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாகவும், அவர்கள் இருவரும் விரைவில் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் பல சர்ச்சைகள் எழுந்த வந்த நிலையில் இருவரும் பிரிந்துவிட்டதாக தங்கள் சமூக வலைதளத்தில் அறிவித்து இருந்தனர். ஆனால், என்ன காரணத்திற்காக இருவரும் பிரிகின்றனர் என்பதை இருவருமே சொல்லவே இல்லை. இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் உள்ளது.
இந்தநிலையில் நாக சைதன்யாவின் குடும்பத்திற்கே முதல் கல்யாணம் பிரிவில் தான் முடிந்துள்ளது என்பது பலர் அறிந்திராத ஒன்று. தெலுங்கு சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் நாகர்ஜூனா. இவர் கடந்த 1984 ஆம் ஆண்டு ராமாநாயுடுவின் மகளும் நடிகர் வெங்கடேஷின் சகோதரியுமான லக்ஷ்மி என்பவரை தான் முதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்த மகன் தான் நாக சைத்னயா. அதன் பின்னர் கடந்த 1990 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.
லட்சுமியை பிரிந்த பின்னர் தான் நாகார்ஜூனா நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பிறந்த மகன் தான் அகில். இவரும் ஒரு நடிகர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தன் தந்தையைப் போலவே தற்போது நாக சைதன்யாவும் முதல் கல்யாண வாழ்க்கையில் இருந்து பிரிந்து இருக்கிறார். அதோடு தன் தந்தையை போலவே இவரும் தன் அடுத்த வாழ்கை துணையை அமைத்துக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.