அஜித் ஸ்டைலில் சால்ட் அண்ட் பேப்பர் ஹேர் ஸ்டைலுக்கு மாறிய சமீரா. கிண்டல் செய்தவர்களுக்கு கொடுத்த பதிலடி.

By Rajkumar · 27/3/2020

காட்டுத் தீயாய் விட வேகமாக இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. அதிக காய்ச்சல், அதிக இருமல், மூச்சுத்திணறல் இவையெல்லாம் தான் கொரோனா வைரஸின் அறிகுறிகளாக சொல்லப்படுகிறது. நாளுக்கு நாள் இந்த கொரோனா வைரஸ் தொற்று பரவுதல் அதிகரித்து கொண்டே உள்ளது. இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். தற்போது இந்தியாவில் 639 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது.

https://www.instagram.com/p/B-Jy046HkSG/

இந்த கொரோனா வைரஸினால் இந்தியாவில் இதுவரை 13 பேர் உயிர் இழந்து உள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதனால் மக்கள் யாரும் வெளியில் வரக் கூடாது என்றும், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இதையும் பாருங்க : நெருங்கிய நண்பரின் திடீர் இறப்பு, கடும் மன வருத்தத்தில் நடிகர் சந்தானம்.

இந்நிலையில் வீட்டில் இருப்பது போர் அடிக்காமல் இருப்பதற்கு பிரபல நடிகை சமீரா ரெட்டி அவர்கள் சோசியல் மீடியாவில் வீடியோவை பகிர்ந்து வருகிறார். கொரோனா வைரஸின் தாக்கம் குறைவதற்காக பிரதமர் மோடி அவர்கள் 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதனால் யாரும் வெளியில் வராமல் வீட்டுக்குள் இருப்பதால் தவித்து வருகின்றனர்.

தனிமை போர் அடிக்காமல் இருப்பதற்கு நடிகை சமீரா ரெட்டி அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் சமையல் குறிப்பு வீடியோக்களை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவை பார்த்து பலரும் இது சமீராவா?? என்றும், தலைமுடியில் நரை, முகத்தில் முதிர்ச்சி என்று முற்றிலும் வித்தியாசமாக உள்ளார் என்றும் கிண்டலத்து உள்ளனர். மேலும், பலரும் அவருடைய தாய்மையை கலாய்க்கும் படியாக இணையத்தில் கிண்டலடித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/B-MbxzBHHKC/

அதற்கு சமீரா கூறியது, நீங்கள் என் தலை முடி குறித்து கிண்டல் அடித்ததால் எனக்கு கவலை இல்லை என்று கூறி சமையல் குறிப்பு பற்றி தெரிவித்துள்ளார். பாலிவுட் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “மெய்னி தில் துஜ்கோ தியா” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. கவுதம் மேனன் இயக்ககத்தில் சூர்யா நடிப்பில் வெளியான “வாரணம் ஆயிரம் ” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.

பின் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல மொழி படங்களில் நடித்து வந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தை கவனித்து வந்த நடிகை சமீரா சினிமாவில் விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வந்தார். தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full