கர்ப்பமாக இருந்த போதும் படுக்கைக்கு அழைத்தனர் சில மிருகங்கள்.! சமீரா ரெட்டி பகீர் பேட்டி.!

By Rajkumar · 9/5/2019


தமிழில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வாரணம் ஆயிரம்' படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் சமீரா ரெட்டி.  இளமையான தோற்றம் வசீகரமான முகம் என்று இருந்ததால் அதன் பின்னர் வேட்டை, அசல். நடுநிசி நாய்கள் என சில படங்களில் நடித்தார்.

தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாகவே இந்தியில் பல படங்களில் நடித்து வந்தார் சமீரா ரெட்டி. இறுதியாக கன்னடத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான 'வரதநாயகா' என்ற படத்தில் நடித்துவிட்டு சினிமாவிகற்கு முழுக்கு போட்டுவிட்டார்.

இதையும் படியுங்க : நடிகர் பார்த்திபன் மீது வேலைக்காரர் கொலை முயற்சி புகார்.! பார்த்திபன் நக்கலை பாருங்க.! 

சமீரா ரெட்டி கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சமீரா பேசுகையில், தான் பிஸியாக நடித்து வந்த நிலையில் திடீரென நடிப்பிலிருந்து விலகினேன். ஆனால் தான் ஏன் சினிமாவிலிருந்து விலகினேன் என யாரும் கண்டு கொள்ளவில்லை.இது தான் சினிமா என அறிந்து கொண்டேன்.

சினிமாவில் எனக்கு பெயர், புகழ், பணம் எல்லாம் கிடைத்தது ஆனால் நிம்மதி இல்லை. சினிமா வாய்ப்பிற்காக என்னை பலரும் படுக்கைக்கு அழைத்தனர். திருமணம் ஆகி தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்தும் திரைத்துரையில் பலரும் தன்னை படுக்கைக்கு அழைத்தனர். பெண்களுக்கு சினிமா துறை பாதுகாப்பானது இல்லை. இந்த நிலை மாறவேண்டும். இந்த சினிமா துறையில் நல்லவர்களும் இருக்கிறார்கள் சில மிருகங்களும் இருக்கிறார்கள்.!

Tamil Behind Talkies AMP · Quick view
View full